இரச வாதம்.. மாணவர்கள் எமக்கு பெருமை சேர்கிறார்கள்..

வணக்கம் ஐயாவின் வழிகாட்டலின்படி செய்யப்பட்ட ஒரு ஆய்வு .

” வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.”

green1

இந்த திருமந்திர பாடலுக்கு இன்று இருக்கும் பல பல பேராசிரியர்கள் எழுதிய விளக்கங்கள் அறிவீர்கள் உண்மையில் போதாதி போதமுமாக அவள் இங்கு கலந்திருக்கிறாள் பின் என்ன செய்கிறாள் . பார்ப்போம்

”ஆங்காரியென்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்

ஆங்காரியாகியே ஐவரை பெற்றிட்டு

ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே !!!”

இரண்டறக் கலந்தவள் என்னவாகிறாள் என்றும் காண்கிறீர்கள் சித்தர்களை பொருத்தவரை இங்கு எல்லாவற்றையும் நிருபித்து காட்டியிருக்கிறார்கள் அவற்றை பரிபாசையாக விட்டு சென்றுள்ளார்கள் குருவின் வழிகாட்டல் இன்றி நிச்சயம் அதை அறிய முடியாது .

” தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே”

நம் அய்யாவின் வழிகாட்டலினால்தான் அவளை காண முடிந்தது .தற் சமயம் அய்யா தந்தையின் இறுதி சடங்கில் இருப்பதால் விரைவில் இதுபற்றி அதிக விவரங்களை பின்னர் தருவார்
நன்றி ஐயா

இது பற்றி பேசுவதானால் இன்று முழுவது பேச வேண்டும். ஆனால் என்ன பலன், இங்கு ஆசாமிகளிடம் சிக்கி சீரழியும் மக்களை சித்தர்கள் நினைத்தாலும் இயலாத காலம் இது. உண்மையை தேடினால் தானே விடை கிடைக்கும், ஆனால் தேடுவது குறுக்கு வழி என்றால் விடையும் அப்படிதானே கிடைக்கும்.

இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்தமை நீங்கள் முற்பிறப்பில் செய்த அருந்தவம்.. இம்முறையாவது அதன் முழு பலனை பெற முயற்சி செய்வோம்.

சிவய நம.

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்