மாவிலங்கு எனும் குமாரகம்..

வணக்கம் மாணவர்களே/ தோழர்களே//

இன்று ஓர் அற்புத மூலிகையாம் “ மாவிலங்கு” பற்றி பார்க்கப்போகிறோம்.

இது.. குமாரகம், வரணி எனவும் சித்தர்களால் கூறப்படும் ஓர் சிறந்த மூலிகை. இது பல தலங்களில் விருட்சமாக வைக்கப்பட்டிருக்கும், ஆனால் இதன் ஆற்றல் அந்த ஆலயத்தில் இருப்போருக்க்கும் புரிவதில்லை.

கைப்பு சுவையுடன் வெப்பம் என்ற தன்மையை கொண்டது இது., இலை பசியை தூண்டுவதில் மிக சிறந்த ஓர் மூலிகை. உடலை உரமாக்கும் தன்மையும் கற்பமாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

பட்டை, குறிப்பாக வேர்பட்டை மலமிளக்கும், கல்கரைக்கும் தன்மை பெற்றது. வாத ரோகத்துக்கும், சன்னிக்கும் இது இல்லாத மருந்துகள் முழுமை பெறாது என்பது பாரம்பரிய அனுபவம்.

கடுமையான சுரம் முதல் வீக்கம் வளிநோய் என கடுமையான ரோகங்களை கண்டிக்கும்.

இதை சரியாக கையாள தெரிந்தால் தங்கம் பற்பமாகும் என்பதும் உண்டு.

“ மாவிலங்கம் பட்டையினால் வாதமொடு சன்னிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் பாறாமே”

இது அகத்தியர் பாடல். இப்படி பல சிறப்புக்கள் கொண்டது குமாரகம் எனும் மாவிலங்கு..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்