எது சாவித்திர் அல்லது காயத்திரி..

வணக்கம் தோழர்களே..,

இன்று எமக்கு ஒரு மின்னஞ்சல் நட்பு வட்டத்தில் இருந்து வந்தது, அதில் இலங்கையில் இருக்கும் ஒரு கண்டலினி மற்றும் வித்தியா யோகி என்பவர் இவ்வாறு அவர் முகநூலில் பதிவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

குறித்த யோகி எமது நட்பு வட்டத்தில் இருந்தவர் பின்னர் உண்மைகளை ஏற்க முடியாத காரணத்தால் (வியாபாரம் இல்லாது போகும் என்ற காரணத்தால்) நீக்கம் பெற்றார்., அவர் முன்னமே காயத்திரி மந்திரம் பற்றி பேசி எம்மிடம் வாங்கி கட்டியது முந்தைய பதிவுகளில் இருக்கும்.

நீண்ட நாள் ஆய்வு செய்து அதற்கு பதிலடி தரவேண்டும் என்று இதை பதிவிட்டிருக்கிறார் போல..
——————————————————————————————–
” காயத்ரி மந்திரமும் தமிழ் சித்தர்களும்

ஒரு நண்பர் தனது முன்துணிபுடன் சித்தர்கள் தமிழர்கள் சித்தர்களுக்கும் சமஸ்கிருத காயத்ரியிற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருந்தார். அத்தகைய கேள்விகளுக்கு பதில் திருமூலர் தந்த்திருக்கிறார். திருமந்திரம் 994.

ஆறு எழுத்தால் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.
——————————————————————————

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.. இதை கண்டதும் எமக்கு மிக மகிழ்சியாக இருந்தது, அதாவது இதற்காக இவர் ஆய்வு செய்திருக்கிறார் என்று, ஆனால் வருத்தம் அதை விட மேல் நின்றது…. இன்னும் இவர் எத்தனை ஆண்டுகள் கற்றால் உண்மைகளை தெரிவார் என்று.. ஆனால் உண்மை தெரிந்தால் வியாபாரம் செய்ய முடியாது என்பது அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் அதை அவர் புரியப்போவதில்லை..

திருமூலர் பாடல் ஒன்றைக் காட்டி இப்படி சொல்லியிருக்கிறார்., இதில் என்ன வேடிக்கை என்றால்…

சமயங்கள் ஆறு என்று வகுத்தவர் யார் என்ற தெளிவு கூட இல்லாத யோகியார் இவர்.. சங்கரர் என்ற ஒருவர் பல பிரிவுகளாக இருந்த மத நம்பிக்கைகளை சமயங்கள் என்று ஆறாக வகுத்து கூறியது இவர் கற்க மறந்த விடயங்களுல் ஒன்று.

சங்கரர் சமயங்களை வகுத்த பின்னரா மூலர் தோன்றினார் என்ற கேள்வியும், சங்கரர் கூறிய சமயத்தை படித்தா மூலர் சித்தரானார் என்ற கேள்வியும், சித்தர்கள் வரிசையில் தனது சிறு விரலைக் கூட சேர்க்க தகுதி அற்ற சங்கரர் என்ற ஒருவரை பின்பற்றிய திருமந்திரம் (இந்தப் பாடல்) வகுக்கப்பட்டது என்ற கேள்வியும் இதில் மேலோட்டமாகவே இருப்பது தெரியாத யோகியார் இவர் போல…! இவரின் குண்டலினி வாசி பயிற்சிகள் வித்தியா வித்தைகள் எப்படி இருக்கும் என்று இதைவிட சான்றுகள் தேவையில்லை..

” ஆறு எழுத்தால் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.”

ஆறு எழுத்து ஆறுசமயங்கள், 24 எழுத்துக்கள், சாவித்திரி, தலை எழுத்து 01 உண்டு.. இதை எந்த அடிப்படையில் இவர்கள் சாவித்திரி மந்திரம் (காயத்திரி) என்று கூறுகிரார்கள் என்ற விளக்கம் தான் இதன் உச்சக் கட்ட சிரிப்பு.. நல்ல யோகிகள் தான்….

ஏன் சர அண பவ என்ற ஆறு எழுத்துக்கள் வராதா… இதற்குள் 24 அறைகள் இருப்பது தெரியாதா.. அல்லது அதில் ஒன்று மட்டும் பிரிந்தே இருக்கும் என்று தெரியாதா.. இது கூட தெரியாமல் நீங்கள் எல்லாம் எப்படி யோக வித்தைகள் செய்கிறீர்கள்..

இங்கு ஆறு எழுத்தும் அது அல்ல, ஆறு சமயங்களும் அது அல்ல, இருபத்து நான்கும் அது அல்ல, தலை எழுத்தும் அது அல்ல.. பிறவியை அறுப்பது அது அல்ல..

இதன் விளக்கம் இங்கு கூறினால் எத்தனை பேருக்கு அது புரியும் என்று தெரியாது ஆனால் கூறுகிறேன் பார்க்களாம் உங்கள் அறிவின் ஆற்றலை…

சிவயநம ஓம்

ஐந்தெழுத்தால் ஆன இவ்வுலகம் என்று குண்டலினியை கூறும் இவர்கள் வாசியின் மூலம் சிவனை தரிசிக்க முற்படும் இவர்கள் இந்த ஐந்தெழுத்தை தாண்டி என்ன இருக்கிறது என்று பேசும் இவர்கள் ஆறு எழுத்து என்று அடையாளம் காட்டுகிறார்கள்.. இந்த யோகிகளை என்ன செய்யலாம்..

ஐந்தெழுத்து “ சி வ ய ந ம “

ஆறாவது எழுத்து ”ஓம்” – சிவ சக்தி ஒடுக்கம் இது ஆகவே இதை ஒன்று என்று கூறுவது மட்டுமே பொருந்தும். இலிங்கத்தை இரண்டு உருவாக நீங்கள் பார்க்க தயார் என்றால் இதை நாம் இரண்டு என்று கூறத்தயார்.
(இதை இரண்டென கருத்தும் எவருக்கும் மூலரின் இந்த வரிகள் புரியப்போவதில்லை)

ஆறுக்கும் நாலே.. ” வ ய ந ம ”

இருபத்து நாலு என்பர் .. “ ஓம் சி —வ ய ந ம– இதை பிடித்து மாற்றிப்பாருங்கள் தோழர்களே, மாணவர்களே மற்றும் யோகிகளே (முட்டாள்களே).. முடியவில்லை என்றால் நாம் கீறி இங்கு இணைத்திருக்கிறோம்.

இதில் தலை எழுத்து ஒன்று உண்டு .. “ சி” இதற்கு தலை இருக்கிறது பாருங்கள்.. தலையில் இருந்தே பாய்கிறது.. கங்கை.. மேலும் இது தலை தான் என்பதுக்கு நாம் காட்டிய வகார முப்பை பாருங்கள்..

இந்த சூட்சுமம் ஞான விளக்கமாக இங்கு காட்டியிருகின்றேன், இதை மருந்தாக தயார் செய்த்தால் அது பிறப்பை அறுக்கும். ( இறப்பு நிச்சயம்) மீண்டும் பிறவாமல் இருப்பது என்று பொருள் யோகிகளே..,

ஆறு மந்திரங்கள் என்பது தான் அந்த மருந்தின் பெயர்கள்..,அது எமது மாணவர்களுக்கு மட்டும் கிடைத்தால் (பெயர்) போதும், மற்றவர்களுக்கு இதுவே மேலதிகமானது தான்.

பஞ்சபூதங்கள், அவற்றின் விளக்கங்கள் எமது மாணவர் திரு ஜெயகுமாருக்கு தெளிவாகவே காட்டியிருக்கிறோம். அவர் வேண்டுமானால் சிறு குறிப்பு எழுதலாம் இங்கு..

” ” ஆறு எழுத்தால் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.”

மேலுள்ளது யோகியர் பதிவிட்ட பாடல் ஆனால் அதன் உண்மையான பாடல்

ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

இவ்வாறு வருவது.., சமய வாதிகள் செய்த பிரட்டு வேலை அது..,

இதை கூறியவர்கள் ஏன் அதன் அடுத்த பாடலை கூறவில்லை.., இதற்கே இவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை பின்னர் எப்படி இதை புரியப்போகிறார்கள்..

எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே.

உங்கள் வாதங்களை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் யானிகளே யோகிகளே.., இங்கு வேண்டாம், இது சித்தர் இலக்கியம் இங்கு இருப்பவர்கள் (இருப்பவை) கடுமையான பயிற்சிகள் மற்றும் ஆய்வுகள் செய்து தேர்ச்சி பெற்றவர்கள். சான்றோர்கள் முன்னோர்கள்… எமது வழிகாட்டிகள் உங்கள் அடுத்த பிறவியிலாவது உங்களுக்கும் வழிகாட்டட்டும்..

இதற்கும் மேலாக நீங்கள் காயத்திரி சாவித்திரி என்று பேசிக் கொண்டிருந்தால் உங்களை எந்த சக்தியாலும் திருத்த முடியாது..

ஒரு நல்ல குருவை தேடிப் பிடியுங்கள்.. முடிந்தால்..!

அப்படியே ஆறுக்கும் இரண்டுக்கும்

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே..”

அப்படியே இரண்டுக்கும் ஒன்று..

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே..”

உங்கள் சினிமாவை இங்கு ஓட்ட முடியாது.., இங்கு மெகா சீரியல் ஓடுகிறது.., அது முடிவடைய நீண்ட நீண்ட நாட்கள் ஆகும்..

விளையாட்டுப் பிள்ளைகள் இந்த யோகிகள்.. விளையாடிப் பார்கிறார்கள் பார்க்கட்டும்..

” சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்”

இந்த அட்சரத்தை எப்படி உபயோகிப்பது என்று நாளை கூறுகிறேன்.. இதுவே சாவித்திரி.. ஆறு மந்திரங்கள் (மருந்துகள்) கொண்ட கூட்டு மருந்து அது. அதன் படம் இங்கு இணைக்கிறேன்,..

முடிந்தால் நீங்களும் இணையுங்கள் பார்க்களாம்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்