பால் கடல், ஆதி முப்பு, வகார முப்பு.

வணக்கம் தோழர்களே, மாணவர்களே..,

இன்று நீங்கள் இங்கு பார்ப்பது (உண்மையான) யோக சாதனையை முறையாக கற்று ஞான (அறிவு தெளிவு) மார்க்கத்தில் பயனிப்பவர்களுக்கு மட்டுமே கைகூடக்கூடிய ஓர் விடயம்.

சித்தர்களின் பாரம்பரியத்தில் அவர்களில் சாதணைகள் இதை தயார் செய்வதாகவே இருந்திருக்கிறது. எமது சான்றோர்களின் ஆசியின் நிமித்தம் பரம்பொருள் எமக்கு கொடுத்த ஞானத்தின் விடைகள் இதில் காணலாம்.

மேடை போட்டு வாசியும், யோகமும் பிரச்சாரம் செய்து பணத்தை பதுக்கி வைக்கும் ஆசாமிகளுக்கு இது அடுத்த ஏழு பிறப்பு எடுத்தாலும் அருந்த முடியாத ஒன்றே..

குண்டலினியை மூலத்தில் பந்தை வைத்து அமர்த்தி எழுப்பும் வித்தை என மாற்றிய முட்டாள்களுக்கு அடுத்து வரும் 14 பிறப்புக்கும் பலனில்லை..,

கண்களை கசக்கி விட்டு நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியை கற்பிக்கும் கயவர்களுக்கு எத்தனை யுகங்களானாலும் காணமுடியாத நெற்றிக்கண் இது.

திருமந்திரத்தை விளக்க உரையை மணனம் செய்து வைத்து மேடையில் பேசி பேசி சமயத்தையும் சித்தர்கள் இலக்கியத்தை தவறான பாதைக்கு இட்டுச் சென்ற இந்த கூட்டத்தை அழித்தால் மட்டுமே சைவம் தழைக்கும்.

நந்தியை மாடு என்று கூறி சமயம் வளர்த்த கூட்டத்தை என்ன சொல்வது, சிவனையே நந்தி என்று மூலர் கூருகிறார் என்று விளக்கம் கொடுத்த மேதாவிகளை என்ன சொல்வது..,

பால் கடலிள் பரந்தாமன் இருக்கிறான் என்றால் அந்த பால் கடல் எங்கே.., கீதையின் சாரத்தில் அணைத்தும் நான் என்றால் அதன் சான்றுகள் எங்கே.., சித்தர்கள் விஞ்ஞானிகள் என்றால் அவர்கள் கூறிய அனைத்துக்கும் சான்றுகள் காட்ட வேண்டும்.

இங்கு நீங்கள் காணலாம் பால் கடல் படைக்கப்படுகிறதை.., இதை கடைந்தால் விசம் அமிர்தம் என இரண்டும் கிடைக்கும்..,

அண்டமதான அக்கினி உப்பை கண்டறியார்கள் காசினி மூடர்….

ஆகாயம் ஏன் வென்மயாக மேகங்களை கொண்டிருக்கிறது, அக்கினியில் (சூரியனில்) இருந்து எமக்கு கிடைக்கும் ஒளி ஏன் வென்மையாக இருக்கிறது..!

வெளிச்சம் என்றால் அது வென்மையை ஏன் குறிக்கிறது..! ஏன் உங்களின் நாத விந்துக்கள் ஏன் வென்மையாக இருக்கிறது.., ஆணுக்கும் சரி பெண்னுக்கும் சரி..,

பால் என்பது வென்மையாக இருக்கிறது, ஆனால் அது உற்பத்தியாகும் குருதி சிகப்பாக இருக்கிறது.. !

“ நந்தியானவர் நல்லுப்பு செயல்தன்னால்
கந்த னானவர் கைலைச் சபைதன்னில்
முந்தியானது முக்கிய கமலமாம்
ஐந்து லாவிய ஆதிமுப்பாகுமே..”

ஞானமாவது நால்வருங் கண்டது
வீனமாக விளங்கும் புரியட்டம்
ஆனமாவது அகம் தனில் பூத்தவர்
வானமாவது வகார முப்பாகுமே..”

சித்தர்கள் பேரைச் சொல்லி இன்று பலரும் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் இத்துடன் உங்கள் வாழ்க்கை முடிவாகிறது என்று நினைக்காதீர்கள்.., நீங்கள் காண இருப்பது மிக கடுமையானவையாக இருக்கும், உங்கள் சந்ததியை நீங்களே அக்கினிக்கு இரையாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்..,

சிந்திக்க மறந்த கூட்டம் என்ற அடையாளம் இன்று தமிழனுக்கு வரக்காரணமே இது தான்..,

இதை செய்தால் சித்தராகலாம் அதை செய்தால் சித்தராகலாம், என்று மேடை போட்டு வியாபாரம் செய்கிறீர்கள், ஆனால் எதை செய்தால் மனிதனாக இருக்கலாம் என்று ஏன் கூறுவதில்லை, காரணம் நீங்களே மனிதர்கள் இல்லை என்பதாலா..!

வாசி குண்டலினி என்ற பயிற்சிகளை உண்மையாக கடுமையாக செய்த இரமகிருஸ்ணர் என்ன ஆனார்..! அவரின் மாணவர்கள் எங்கே போயினர்…, சிந்தியுங்கள்… பல தடவைகள் நாம் பல சான்றுகள் கொடுத்து விளக்கம் தந்திருக்கிறோம். உங்களை சூழ இருக்கும் இந்த குரு மார்களிடம் போய் கேளுங்கள் அவர்களின் இலட்சணம் புரியும்..

அவ்வையின் அகவல் இன்று படும் பாடு என்ன..!

“ மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே “

என்ற வரிகள் இன்று இந்த வாசியில் …… மூலத்துக்கு கீழ் குதி கால் அடிப்பக்கத்தை வைத்து பயிற்சி செய்வது என்ற நிலைக்கு சென்றுவிட்டது..

மூலாதாரம் என்பதன் விளக்கமும் கால் என்பதன் விளக்கமும் தெரியாத இவர்கள் வாசி தெரிந்திருக்கிறார்கள்… ! தமிழுக்கு ஏற்பட்ட நிலை … தமிழுக்காக வாழ்ந்த அவ்வையின் பாடல் தமிழை அழிக்கும் பாடலாக மாறியது கவலைதான்..!

இங்கு நீங்கள் பார்ப்பது ஆதியாக இருக்கும் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் கைலாச கதி என்று கூறும் பரம்பொருளின் காட்சி.

சிவனார் விந்து என்பது இதுவே.. இரசம் என்று நாம் கடைகளில் வாங்குவது இதற்கு மாற்றாக பயன்படுத்துவது. இதற்கு பல பெயர்கள் காரணப்பெயராக அமைந்தாலும் இதன் சரியான சொல் வகாரம் என்ற ஆகாயம்.

எல்லைகள் கடந்து இருப்பது., பால் கடல் என்று கூறப்பட்டு பரந்தாமன் தூங்குவது இங்குதான்.., பரந்தாமன் என்பது நீங்கள் பார்க்கும் ரூபமாக சிந்திக்காதீர்கள்..

” பார்ப்பான் அகத்தில் பால் பசு ஐந்துண்டு” என்று மூலர் கூறியதும் இது தான்..,

இதனுல் அடங்கி இருப்பதோ அளவு கடந்த இரகசியங்கள்.., வேதங்கள் ஆகமங்கள் உபநிடதங்கள் என பலவும் கூறும் மாயைப் பொருள் இறைவனின் ஆற்றல் இதற்குள் அடக்கம்..

இதைப் பாருங்கள் இந்த வாசி குண்டலினி என்று பேசும் முட்டாள்களே..

“ நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
******வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை****
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே”

இது சன்மார்க்கம் பேசும் முட்டாள்களுக்கு..

“ எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. ”

வள்ளலார் சொன்னார் என்று எவனாவது சன்மார்க்கள் பற்றி இங்கு பேச வருவதானால்,. இராமலிங்கம் என்ற முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்…

” தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே”

பால் கடலிள் நடப்பது பற்றி சிறு குறிப்பு..

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே..

குரு இல்லா வித்தை பாழ்.. இதில் இதுவும் அடங்கும்..

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே…

நீங்கள் யாரிடம் கற்பதானாலும் அதற்கு முன்னால் அவர் சரியானவரா என்பதை ஆராய்ந்து பின் சேர்ந்து படியுங்கள்..

நீங்கள் கேள்விகள் கேட்டால் அதற்கு குரு விடைகள் தரவேண்டும், அத்துடன் குருவுக்கும் மாணவனுக்கு இடையில் தரகர்கள் ஏன்..! யாரவது குருமார் உங்களுடன் நேரடியாக பேசாமல் சீடர்களை விட்டு உங்களுடன் பேசினால் அவர்கள் போலியானவர்கள்..

இதன் விளக்கம் தொடரும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்