மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்…

வணக்கம் மாணவர்களே /  தோழர்களே..

நீண்ட நாட்களாக எந்த மந்திரப்பதிவும் வரவில்லை என்ற ஏக்கம் எமது மந்திரங்களை எதிர்பார்கும் வாசகர்களுக்கு இருக்கிறது.. அதன் வெளிப்பாடாக நாம் ஓர் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என இருக்கிறோம்..

அதாவது சாத்வீக தன்மை கொண்ட இயந்திர மந்திர உபாசனைகள் செய்து தரலாம் என நினைக்கிறேன்.. உதாரணமாக கூறினால் உங்கள் வீடுகளில் தொழில் சாலைகளில், வியாபார தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சில வழிபாடுகள்..

1. மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்
வீடுகளில் பெண்களால் செய்யப்பட வேண்டிய பூசை முறை.

2. சுப்ரமணியர் மாத்ருக இயந்திரம்
தொழில் நிலையத்தில் ஏற்படும் தடைகள் நீங்க செய்யவேண்டியவை.

3. பால சண்முக மகா இயந்திரம்
குழந்தை பாக்கியம் என்ற சொல்லுக்கு இதுவே ஆதாரமக கூறப்படுகிறது. பெண்களால் செய்யும் வீட்டு வழிபாடு.

4. ஸ்ரீ சுப்ரமணியர் மகா இயந்திரம்
முருகப்பெருமானின் அருளை பெற்று ஞான மேட்சத்தை அடைய இது., ஆண் பெண் என எவரும் இதை பூஜிக்கலாம். அவ்வையார் இந்த பூசை செய்ததாக எமது குரு வம்சத்தினர் கூறுவதுண்டு.

5. பிரம்ம இயந்திரம்..
கன்ம வினையால் நாம் இங்கு பிறந்திருக்கிறோம், அதில் இருந்து விடுபட்டு மேலும் இப்பிறவியில் நாம் செய்த வினைகளை நீங்கி இனியும் பிறப்பு வேண்டாம் என்று வழிபடும் பூசை முறை..

6. ஸ்ரீ விஷ்னு மகா லட்சுமி இயந்திரம்
இது ஆண்களால் தொழில் சாலைகள் வியாபார இடங்களில் கண்டிப்பாக செய்ய வேண்டிய வழிபாடு..

7. மகிடாசூர மர்த்தனி இயந்திரம்
தொடர்சியான எதிரிகள் தொல்லையில் இருந்து வெளிவர, வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் மூலம் ஏற்படும் மனகசப்புக்கள் விலக இதை ஆண்கள் பெண்கள் என யாரும் செய்யமுடியும்.

8. நந்திகேஸ்வரர் மகா இயந்திரம்
இது ஓர் அற்புதமான இயந்திரம் சிவபூசைகள் செய்து வழிபடுபவர்கள் இந்த இயந்திரத்தை பூசித்தால் சிவனை மிக இலகுவாக நெருங்க முடியும். இவர் ஞான நெறியை பேதிப்பவர்.

9. கணேசர் ஸ்ரீ லட்சுமி மகா இயந்திரம்
இதுவும் வீடுகளில் செய்ய வேண்டிய பூசைமுறைகளில் ஒன்று. வீட்டு வாசல் படியில் இருந்து வீட்டை உள் நோக்கி இந்த இயந்திரத்தை வைக்க வேண்டும். இதன்மூலம் இரணிய காலத்தில் (மாலை 5.30 – 6.30) வரையில் மகாலட்சுமி இந்த இயந்திரம் இருக்கும் வாசல்களில் வந்து ஆசி செய்வால் என்பது இரணிய சகதம் எனற வடநூலில் கூறப்படுகிறதாக கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..

10. ஸ்ரீ வக்ரதுண்டர் மகா இயந்திரம்
இது மிக அற்புதமான இயந்திர மந்திர பூசை, வீட்டில் குடும்பங்களில் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புக்களை நீக்கி, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மிக சிறந்த வழிபாடாக அமையும்.

இங்கு நாம் பதிவிட்டிருப்பவை வேத ஆகம உபநிடதங்கள் சாந்த அடிப்படியில் உருவாக்கப்பட்ட இயந்திர மந்திர பூசை முறைகள்.., இவை நீண்ட காலமாக நாம் உபயோகிக்கிறோம், எமக்கு அல்ல பிரச்சனை என்று வருபவர்களுக்கு.. நல்ல பலனும் கிடைக்கிறது..

விஷேடமாக ஹோமம் செய்து அதில் இந்த இயந்திரங்களை ஆவாகணம் செய்து வேண்டுமானாலும் தரமுடியும்.

குறித்த நபரின் புகைப்படத்துடன் எம்மை தொடர்பு கொண்டால் உங்கள் தேவைக்கு ஏற்ற இயந்திரமும் அதன் பூஜை முறையும் செய்து தரப்படும். இதனுடன் சகல காரிய சித்தி தரும் திலர்த்தம் சேர்த்து வேண்டுமானால் நிங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் வெளிப்படையாக இந்த முறைகளை பதிவிடலாம் என நினைத்தோம் ஆனால் எமது பிலாக்கில் இருந்த மந்திரங்கள் விற்பனையானதை அவதானித்தபின்னர் இதை பதிவிடக்கூடாது என்ற திடமான முடிவுக்கு வந்துவிட்டோம்.

உங்களுக்கு இங்கு காட்டப்படும் விடயங்கள் தெரிந்திருக்கும், மருந்துகளானாலும் சரி இரசவாதம் ஆனாலும் சரி மந்திரமானாலும் சரி, அவற்றை ஆதாரங்களுடன் பதிவதே எமது பனியாக இருக்கும்.

நம்பிக்கை இருப்பவர்கள், தேவை இருப்பவர்கள், எமது மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவாக எழுதி அனுப்புங்கள்..

muthaly@gmail.com அல்லது  siththarvaakadam@gmail.com

என்ற இரண்டு மின்னஞ்சலுக்கும் உங்கள் தகவல் அனுப்பலாம்.

எமது இணையம் siththarvaakadam.org

உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் அது உங்களை வந்தடையும். இருக்கும் இடத்துக்கு ஏற்ப அதன் கட்டணம் அமையும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்