வாதமூர்த்தி பெரிய குளிகை..

வணக்கம் தோழர்களே..

இது பாரம்பரியமாக கையாட்சியாக வரும் ஓர் அற்புதமான கற்ப குளிகை.., இதில் பாஷாண சரக்குகள் மற்றும் உபரச சரக்குகள் உபயோகிக்கப்படுகிறது. வாதம் பித்தம் கபம் என்ற முத்தோஷத்தால் ஏற்படும் பல ரோகங்களுக்கு இது ஓர் நல்ல குளிகையாக அமைகிறது..

உடல் வலியை இலகுவாக போக்க கூடிய வகையில் இதன் சரக்குகள் சேர்க்கப்பட்டு இரச பற்பம் சேர்த்து தயாராவதால் இது ஓர் சிறந்த சித்த மருத்துவ குளிகையாக அமைக்கிறது.. அகத்தியர் குழம்பு போல் ஒரே குளிகை ஆனால் சுமார் 62 வகையான ரோகங்களை மூன்றே நாளில் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதை நாம் பாத்திருக்கிறோம்.. பற்பம் செந்தூரங்களுக்கு நிகராக இந்த குளிகை செயலாற்றுவதை வைத்தே இதற்கு வாதமூர்த்தி பெரிய குளிகை என எமது முன்னோர்கள் பெயர்வைத்திருக்கிறார்கள் போலும். இது 48 மணி நேரம் அரைத்து எடுக்கும் ஓர் குளிகை என்பது இதன் தனிசிறப்பை எடுத்துக்காட்டுகிறது.. எனது தற்போதைய கடைசி மகன் என்னுடன் சேர்ந்து இதை அரைக்க உதவிசெய்தான்..

vaathamoorthikulikai

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்