இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று…

வணக்கம் மாணவர்களே/ தோழர்களே.

முந்தைய பதிவு..

இதுவும் அது..அதுவும் இது…

“ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று
இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர்
இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால்
இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும்
இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன்
இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும்
இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி
இக்கலையை யறிந்துணர்ந்தவ் விடத்தில்நில்லே..””

“ நில்லென்று சொன்னதொரு ஆசான்வாக்கை
நிலைதவற விட்டாலே பலிதமாகா
அல்லவிதன் விபரமதை தெரியக்கேளு
அண்ணாக்கை யுண்ணாக்கி லயிக்கம்பண்ணி
நல்லாய ரவிமதிபூ ரணங்கண்மூக்கு
நானிலத்தில் வாய்செவியும் பரிசம்மெட்டும்
சொல்லாதே நடுவணையென் றிதற்குநாமஞ்
சொல்லிடுவார் கயிலாசஞ் சொர்க்கமென்றே..”

இதைவிடவும் ஓர் இலகுவான விளக்கம் உங்களுக்கு வாசி பற்றி பிராணாயாமம் பற்றி மூச்சுப் பயிற்சி பற்றி கூறமுடியாது..
பாடல் விளக்கம் குறிப்பாக..

இடகலை பிங்கலை சுழிமுனை என்ற மூன்றும் ஒன்று இது இன்பத்துடன் இருப்பதற்குறிய பொருள்.. இதுவே ஈசனாகவும் இருக்கிறது.. இது தெரியாமல் முட்டாள் பயலுகள் திரிறாங்கலாம்..இடது வலது நடு என்பது உச்சி நடு அடி என இருக்கிறது… இதை உணர்ந்து நில்..
இப்படி உண்மைய ஆராய சொன்ன குருவின் சொல்லை மதியாமல் திரிபனுக்கு இது பலியாது,,.. இதன் விபரம் என்னவென்றால் உள்ளிருப்பதையும் வெளியிருப்பதையும் ஒன்றாக கூட்டி உடலின் பரிசங்கள் எட்டுக்கும் இது தான் நடுவாகும்.. இதைத் தான் கயிலாயம் என்றும் சொர்க்அமென்றும் சான்றோர் கூறுவர்..
இப்படி கூறும் சித்தர்கள் எப்படி உங்களை மூக்கை பொத்திக் கொண்டு காற்றை இழுக்கவும் விடவும் சொல்லியிருப்பார்களா..! அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அதில் எத்தனை வீதம் பரிபாசை கலந்திருக்கும்..

“ என்றேபற் பலவாக யியம்புவார்கள்
இந்திரபுரி வைகுண்ட கயிலாசந்தான்
நன்றேகன் யாகுமரி காசிசேது
நலமான மேகமொடு நாதமென்றும்
வல்லதொரு காற்றுடனே சூட்சமென்றும்
மன்றாகு மவுனமுடன் ஆதியென்றும்
குன்றான ஆதிநடு முடிவீதென்றும்
குணமுடைய வஸ்துபதி யிதுயென்பாரே..”

இந்திர லோகம், வைகுண்டம், கயிலாசம், கன்யாகுமரி, காசி, சேது, மேகம், நாதம், காற்றின் சூட்சம், மவுனம், ஆதி, குன்று இப்படி எல்லாப் பெயராலும் அழைக்கப்பட்டது ஒன்றே…

ஏகாதசியில் செத்தவன் வைகுண்டம் போவான் என்று சொன்ன பழந்தமிழனின் வாக்கு இன்று பஞ்சாங்கத்தில் முடங்கிப் போனது..
கயிலாசத்துக்கு (இமயத்துக்கு) போனால் இன்று நமது மக்கள் மட்டும் ரிசிகளாகவும், சித்த்ர்களாகவும், யோகியாகவும், சாமியாராகவும் மாறுகிறார்கள்.. ஆனால் சுற்றுலாக்கு வரும் எந்த வெள்ளையனின் கண்ணுக்கும் தெரியாத காட்சி நமது மக்களுக்கு மட்டும் தெரிகிறது.. கேட்டால் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் காட்சி தரமாட்டார் என்பது…! ஏண்டாப்பா.. நம்பிக்கை இல்லாதனை நம்பவைப்பது தானே இறைவனின் ஆற்றலாக இருக்க வேண்டும்… கேட்டால் நம்பினார் கெடுவதில்லை என்பார்கள்… நாங்கு மறை தீர்ப்பு என்பார்கள்…நம்பாதவர்கள் யாரும் இங்கு வாழ்வதில்லையா.. உங்கள் பரமனை நம்பாத நாடுகள் உங்கள் நாட்டைவிட சிறந்த நாடுகளாகவும் செழிப்பாகவும் இருக்கிறதே.. இப்படிக் கேட்டால் விதண்டாவாதம் என்பார்கள்.. எதற்கும் அடியும் முடியும் தெரியாதவர்கள் கூறும் நொண்டிச் சாட்டுக்கு விதண்டாவாதம் என்று பெயர்..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.. இன்று குமரன் என்ற பெயரில் கோவில்கள் மட்டும் இருக்கிறது,.. குமரன் எவனையும் கானவில்லை..

இப்படி பல பல இரகசியங்கள் புதைந்த தமிழை பணத்துக்காக அடகு வைக்கும் ஆசாமிகளை என்ன சொல்வது..
கடவுள் என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு.. இதை சரியாக புரிந்தால் நீங்கள் யாரும் சாமியார்களிடம் போகப்போவதில்லை.. மந்திரவாதிகளை தேடப்போவதில்லை..

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால்.. நீ விரும்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி… அவரின் அன்பு எப்போதும் இருக்கும்.. அதை பணத்தை கொடுத்து வாங்க நினைப்பது அவரை நீ உதாசினம் செய்ய முடிவாகியது என்று அர்த்தம்..
அருச்சணை போட்டால் கஷ்டம் தீரும் என்றால்.. அருச்சனை போடாதவன் கஷ்டத்தை அவர் தீர்க்கமாட்டாரா… அப்படியானால் அவரை தாயுமானவர் என்றும், அன்பின் சொரூபம் என்றும், அன்பே சிவன் என்றும் ஏன் கூறுகிறீர்கள்..

அவருக்கு நீங்கள் அன்பு செலுத்த விரும்பினால் அதை நீங்கள் உங்கள் கடமைகள் மூலம் சரியாக செய்யுங்கள்..

“ வையப்பா உபதேசம் யாராருக்கென்றால்
மைந்தனே யெச்சாதி யானாலென்ன
மெய்யப்பா தவறாத சீடன்வேனும்
மேன்மையுள்ள புத்தியதா யிருக்கவேணும்””

எமக்கு குரு வம்சத்தின் மூலம் கிடைத்த உண்மைகளை எமக்கு பின்னர் யார் எடுத்துச் செல்வார்கள் என்று நீண்ட நாட்கள் தேடி தற்போது ஒரு மாணவன் சிறப்பானவர் சிறந்த ஆய்வாளர் கிடைத்திருக்கிறார்.., பார்க்களாம் எதுவரை அவரது பயணம் தொடர்கிறது என்று.. எம்மிடம் சித்த மருத்துவம் கற்கும் அணைவரும் எமது மாணவர்கள் தான் ஆனால் எத்தனை பேர் சித்தர் இலக்கியத்தை புரிந்து செயலாற்றப்போகிறீர்கள் என்று காலம் தான் சொல்லவேண்டும்.

அனைத்தையும் தாண்டிய அம்சம் ஒன்று உண்டு என்பது பழந்தமிழன் வாக்கு.. அதற்கமைய காலத்தின் கட்டளையை காத்து எமது பயனம் தொடரும்..

இங்கு.., நீங்கள் யாரும் நல்ல மாணவர்கள் அல்ல என்ற அர்த்தம் அல்ல.. உங்கள் நிலை உண்மையை கற்பதை விட வாழ்க்கையை வெற்றியடையச் செய்வது என்ற பயனத்தில் இருப்பதால்… அந்த மாயையில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் எடுக்கும்…

வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்