புதிய மாணவர்கள் இணையலாம்..

வணக்கம் மாணவர்களே…,

சித்த மருத்துவம் எம்மிடம் கறக் வேண்டும் என்று ஆசையுடன் வேண்டுகோள் விடுத்திருந்த அணைவருக்கும் எமது நன்றிகள்.

எதிர்வரும் மாதத்தில் இருந்து சித்த மருத்துவ ஆரம்ப நிலை வகுப்புக்கள் இணையத்தின் மூலம் தொடரலாம் என எமது சான்றோர்களிடம் இருந்து தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

சித்த மருத்துவம் என்பது கல்லூரியில் படிப்பதானால் சுமார் எத்தனை வருடங்கள் தேவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லாது போனால் அதை தேடிப்பாருங்கள்., இங்கு நாம் அதை கருத்திற் கொண்டு எமது பாடநெறிகளை வகைப்படுத்தவில்லை.

இதுவோ குருகுல கல்வி முறை., இங்கு சரியை கிரியை யோகம் ஞானம் என்ற அடிப்படையில் இந்த பயிற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படும். இதில் உலகெங்கும் இருக்கும் தமிழ் பேசும் (எழுத படிக்க) தெரிந்த எவரும் இணையலாம். இது ஆன்மீக பயிற்சி கிடையாது.., ஆனால் இதுவும் சிறந்த ஆன்மீகமே..

சித்த மருத்துவத்தில் எமக்கு தெரிந்த விடயங்கள் வரை இந்த கல்வி தொடரும்.. ஆனால் அதற்கு பொருமையும் நேரமும் அதிகமாகவே தேவைப்படும். இந்த கட்டுப்பாடுகள் இருப்பவர்கள் தாராலமாக இதில் இணையளாம்.

மூன்று மாதங்கள் கொண்டதாக ஒவ்வொறு பாடநெறியும் இருக்கும், அதன் முடிவில் ஓர் சிறிய பரீட்சையும் இருக்கும். மொத்தமாக 12 பாடநெறிகளை கொண்டதாக இந்த கல்வி அமைக்கப்பட்டிருக்கிறது., வகுப்புக்கள் இணையத்தில் ஒளி ஒலி வடிவில் (வீடியோ கான்பிரன்ஸ்) அமைக்கப்பட்டிருக்கிறது., மூன்று மாத கால முடிவில் ஒரு வாரம் நேரடி வகுப்பு சென்னையில் நடக்கும். இது பாடநெறிகளின் தன்மையை கொண்டு அமையும்.

6 பாடநெறிகளின் முடிவில் பாரம்பறிய சித்த மருத்துவ பயிற்சிக்கான சான்றிதல் தரப்படும் இது முதற்கட்ட சான்றிதலாக அமையும். இதை வைத்து நீங்கள் உங்கள் ஊர்களில் இருக்கும் சித்த மருத்துவ சங்கத்தில் பதிவு செய்து (அவர்களின் தேர்வுகளில் சித்தி பெற்று) மருத்துவ முறைகளை செய்யலாம்.

அடுத்த கட்ட சான்றிதல் இறுதி நிலையின் பின் தரப்படும். இது நீங்கள் முழுமையான ஓர் சித்தமருத்துவர் என்ற சமூக மரியாதையை அமைக்க உதவியாக இருக்கும்.

பாடநெறிகள் தொடர்பான விபரம் பதிவு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே தரப்படும்.

பாடநெறிக்கான கட்டணங்கள் 1500/- இந்திய ரூபாயில் இருந்து 3000/- இந்திய ரூபாய்வரை பாடநெறியின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

பாடக்கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்குவது இயலாமையாகவே தற்போதைய நிலையில் இருக்கிறது, காரணம் வெளி நாட்டு நாணய விதிகளுக்கு நாம் தற்போது நுலைய முடியாது மீறினால் நாம் வருமான வரி மற்றும் நாணய மாற்று சட்டங்களுக்கான அணுமதிகளை பெற வேண்டியிருக்கும். தற்போதைய நிலையில் அவை எமக்கு சாத்தியமற்றதாகவே இருக்கிறது.., ஆனால் மாணவர்கள் சேர்க்கை சரியாக அமைந்து பாடநெறிகள் ஒழுங்காக செல்ல ஆரம்பித்த பின்னர் அவை ஏற்பாடுகள் செய்யப்படும்,..

குறைந்தது 10 மாணவர்கள் சேர்ந்தால் தான் ஒரு குழுவாக அதை அமைக்க முடியும். இல்லையேல் இதில் எமது நேரத்தை வீனடிக்க முடியாத நிலை ஏற்படும். அல்லது குறைவான மாணவர் சேர்க்கை என்றால் பத்து மாணவர்களின் கட்டணம் உங்களிடம் பகிரவேண்டி இருக்கும்..

வகுப்புக்கள் தினமும் 2 மணி நேரம் இருக்கும். இது அனேகரின் பொதுவான ஓய்வு நேரத்தை வைத்து தீர்மானிக்கப்படும். இதில் தவறியவர்களின் வகுப்பை அவர்களின் ஓய்வு நேரத்தில் எம்முடன் தொடர்பு கொண்டு கற்கலாம்.. நாமும் ஓய்வாக இருக்கும் போது.

அல்லது இரண்டு பிரிவுகளாக பிரித்து நேரத்தை தீர்மானிக்களாம்.

பாடநெறிகள் அகத்தியர் வகுத்த குருகுல கற்கை நெறிகளை அடிப்படையாக கொண்டு அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாக அமையும். இதில் மாந்திரீகம் என்பது மருத்துவ தேவைகலுக்கானவையாக மட்டுமே இருக்கும்.. ஆனால் மூலிகைகள் என்ற அடிப்படையில் அட்டகர்ம பிரயோகங்களும் அவற்றின் முறையான மந்திர தந்திர இயந்திர மூலிகைகளுடன் விரிவாக இருக்கும்.

செய்பாகம், கைபாகம், குணபாகம், என தெளிவான முறையில் இந்த பாடநெறிகளை நமது சான்றோர்களின் வழிகாட்டலுடன் தயார் செய்திருக்கிறோம்.

இதில் சுமார் 100 மேற்பட்ட சித்தர் நூல்கள் இணைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாக அமைகிறது.

இதை கற்பதற்கான தகுதி என்ற நிலையில் இருப்பவர்கள் என்றால் வயது 18 பூர்த்தியானவர்கள், மற்றும் சுயமான ஊதியம் பெருபவர்கள் (உழைப்பவர்கள்) மட்டுமே.., ஆண் பெண் என்ற வேற்றுமை கிடையாது. இந்தியா தவிர்ந்த வேறு நாட்டவர்கள் என்றால் அவர்களின் நேரடி வகுப்புக்கள் எம்மால் முடிந்தவரையில் எவ்வாறு ஏற்படுத்தலாம் என்ற முடிவு பின்னர் பார்க்களாம். அல்லது அவர்கள் இந்திய வரக்கூடிய காலத்தில் நேரடி வகுப்புக்களை அமைக்கலாம்.

முதல் பாடநெறியாக அமைய இருப்பது..

பகுதி 1

1. அவையடக்கம்
2. வைத்தியன் நிதானம்
3. நோயாளி அணுகு முறை
4. கடவுள் துதிகள் – மந்திர உபாசனைகள் மருத்துவம் சார்ந்தவை
5. ரோகங்களை பரீட்சித்தல்
6. சாத்திய அசாத்திய குறிகள்

கட்டணம் 700/- இந்திய ரூபார்
காலம் ஒரு மாதம்

பகுதி 2

1. நாடி நிலை
2. தச நாடிகள்
3. தச வாயுக்கள்
4. பிண்ட உற்பத்தி
5. பிண்ட ஆயுள் மற்றும் கால தோஷ நிலை
6. பஞ்ச பூதங்கள்

இதற்கான கட்டணம் – 1200/- இந்திய ரூபாய்.
காலம் இரண்டு மாதம்.
——————————————————————————————————–
கட்டணங்கள் செலுத்தும் முறை இந்தியாவில் இருப்பவர்கள் காசுக்கட்டளைகளை ( மணி ஆடர்) எமது சென்னை தலமை நிர்வாகிக்கு அனுப்பிவைக்ககூடியதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருக்கும் மாணவர்கள் நேரடியாக எமக்கு பணம் அணுப்பும் முறைகள் தரப்படும்.

பாடநெறிக்கான கட்டணம் முழுமையாக செலுத்தல் வேண்டும். மூன்று மாத கால கல்விக்கு நீங்கள் செலுத்தப்போவது 1900/- ரூபாய் மட்டுமே.., இதுவும் ஏன் என்றால் உங்களை நேரில் வந்து கற்பிக்க வரும் போது விமானசீட்டு வீசா தங்குமிடம் என எமக்கு இருக்கும் செலவில் குறித்த பகுதியை மட்டுமே நாம் உங்களிடம் வாங்குகிறோம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்..

கற்பித்தல் வரும் மாதம் முதல் திகதியில் ஆரம்பமாகும். அதற்கிடையில் உங்கள் பதிவுகளை muthaly@gmail.com என்ற அஞ்சலுக்கு அனுப்பி அனுமதி பெருங்கள். பணம் செலுத்தும் முறை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்படும்.

உங்கள் விண்ணப்பம் சுயவிபர கோப்புடன் இருக்க வேண்டும். (BIO DATA).

” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”

என்ற வள்ளுவர் வாக்குக்கு அமைய உங்கள் கற்றல் இருக்கட்டும்..

” தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். ”

என்ற வள்ளுவர் வாக்குக்கு அமைய நாம் பயனிப்போம்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்