சூதம் செத்தால் பராபரை முன்னிப்பாள்

வணக்கம் தோழர்களே,

சூதம் செத்தால் பராபரை முன்னிப்பாள் என்ற வரிகளின் விளக்கம் இதுவரையில் கிடைக்கவில்லை.., சரி நமது மக்களைப்பற்றி நமக்கு தெரியாதா ..!

சுருங்க சொல்கிறேன்..,

விந்தை கட்ட நாதத்தால் மட்டுமே முடியும்.., இரசத்தை இங்கு எதுவும் கொல்ல முடியாது.., அதுவே அழிக்கும் ஆற்றல் கொண்ட சக்தியாக இருக்கும் போது அதனுடன் சண்டையிட எதுவால் முடியும். அதனால் தான் அங்கு நாதம் என்ற பராபரையாள் தேவைப்படுகிறாள்.., விந்தை தனக்கும் அடக்கி தான் வெளியில் தோன்றுகிறாள்.

பராபரையாள் அழிக்கும் ஆற்றல் கொண்ட விந்துவை தன்னுடன் சேர்த்து ஆக்கும் ஆற்றல் கொண்ட சக்தியான சிவசக்தி நிலைக்கு வந்துவிடுகிறாள். விந்துவாகிய இரசம் இங்கு தூய்மைப்படுத்தப்படுவதன் போது நடைபெரும் மாற்றம் இதுவே..,

இங்கு செத்தால் என்பது இறப்பை குறிப்பது அல்ல, மாற்றத்தை குறிப்பது.., இறப்பின் பின் மறுவாழ்கை இருப்பது என்பதை வைத்தே உங்கள் பாவபுண்ணிய கணக்குகள் கவனிக்கப்படுவதாக நீங்கள் கூறுவது ஞாபகம் இருந்தால் சரி..,

மாற்றமே நிலையானது என்ற கோட்பாடு இதற்கு ஓர் சாட்சியாக இருக்கட்டும்..

” கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே”

” அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே”

” நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே”

” விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே”

” இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே”

இங்கு சாட்சிகளாக காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் பரிபாசையக புகட்டுவது இந்த தத்துவ விளக்கத்தையே… உரைநடை எழுதிய ஆசிரிய சிகரங்கள் செய்த தவறினால் இந்த பாடல்கள் உங்கள் கண்களை மாயைகளாக்கி விட்டது..

விந்துவை நாதத்தில் சேர்த்து பின் நாதத்தை விந்துவில் கலந்து அங்கு நாத விந்துக்கள் மூலம் குழந்தைகளை பெருவதே இரசவாதம்.

இங்கு நாம் தந்திருக்கும் சிறு விளக்கத்தில் மாபெரும் இரகசியங்கள் இரண்டை குறித்திருக்கிறோம்.. முடிந்தால் அதை புரிந்துகொள்ளுங்கள்..

” சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே”

”ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.”

இது புரிந்தால் நீங்களும் யோகியே..

தென்னாடுடைய சிவனே போற்றி… என்னை வழி நடத்தும் குருவுக்கு இந்த பதிவு சமர்பணம்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்