திருநீல கண்டர்

வணக்கம் தோழர்களே,

இரசமணி பற்றிய பல விடயங்கள் இணையங்களில் கிடைக்கிறது, ஆனால் அவை குறிப்பிடும் அளவு செயலாற்றுகிறதா என்ற கேள்வி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

இங்கு நாம் காட்டுவது முறையாக சுத்தி செய்த இரசத்தை காரம் சாரம் கொண்டு கட்டி மணியாக செய்வது. இது நாத விந்துக்களை கொண்டு பஞ்சபூத சக்திகளை தம்முள் அடக்கிக் கொள்ளும் ஓர் மணி மந்திர முறையில் தயாராகிறது. இது திருநீல கண்டக் குளிகை என சான்றோர்களால் அழைக்கப்பட்ட முறையாக இருக்கிறது.

மருத்துவ முறைகளுக்கு பயன்படுத்தக் கூடியதும், சகல தோஷங்களை போக்கக் கூடியதுமாக இந்த திருநீல கண்ட பெருமான் செயற்படுகிறார். இதற்கான சாரணைகள் இன்னும் பல செய்ய வேண்டிய நிலை இருப்பினும், ஒளியில் வைத்து பார்த்தால் மணியில் இருந்து நீல வர்ணத்துடன் கதிர்வீச்சுக்கள் வெளியாவது தெரியும். இதனாலேயே இதை திருநீலகண்டர் என்றார்கள் போலும் சான்றோர்கள்.

இதன் பயன்பாடு மற்றும் செய்கைகள் பற்றி பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்