ஜெயநீர் வடிப்பதை வீடியோவில்…

வணக்கம் தோழர்களே,

பொதுவாக ஜெயநீர் என்பது சரக்குகளை அரைத்து பனியில் வைத்து அதில் கசியும் நீரை பிடிப்பதுவே என கூறப்படுவது உண்மையே, ஆனால் இது ஆறுவகை ஜெயநீர் என்பது கடுமையான ஆறு வகையான சரக்குகளை குறித்த அளவில் தனித்தனியே அரைத்து அவற்றை பக்குவமாக சேர்த்து பிசைந்து பின் வாலை அடுப்பில் வைத்து வடிப்பதுவே ஆகும். போகர் சப்த காண்டத்தில் வெடியுப்பு ஜெயநீர் வடிப்பது பற்றி தெளிவாக கானலாம், அத்துடன் அகத்தியர் வாத சௌமியத்திலும் சில இரகசியங்கள் இருப்பதை காணலாம்.

அப்படி வடிக்கப்பட்ட ஆறுவகை ஜெயநீர் கொண்டு நவபாசாண குளிகைகள் இலகுவாக செய்யலாம். இங்கு அதை வடிப்பதை வீடியோவாக தருகிறேன், இதில் பல இரகசியங்கள் புதைந்து கிடக்கிறது.

குறிப்பாக சொன்னால் ஆறுவகை சரக்குகளும் நாதவிந்து சரக்குகள் அவை ஒன்று சேர்ந்து அகாரமாகவும் உகாரமாகவும் மாற்றம் பெற்று பஞ்சபூதங்களையும் தம்முள் அடக்கி பின்னர் அதில் இருந்து விந்தை வெளியில் நீராகவும் நாதத்தை உப்பாகவும் குடுவையில் படியவைக்கின்றது. இது இரச நீராகவும் கெந்தக உப்பாகவும் இருக்கும்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்.

சித்த மருத்துவர்.