இரசமணி, அர்த்த நாதீஸ்வர குளிகை

வணக்கம் தோழர்களே,

saramani2

இது இரச தொந்தம் மூலம் செய்யக்கூடிய இரசமணி, நாதத்தில் விந்தை சுத்திசெய்து தயாரிக்கும் ஓர் அற்புதமான முறை இது. மருந்துக்காக செய்யும் இரச மொழுகு இதுவாகும், இதை தியான மாலைகள் செய்வதற்கு அல்லது இரசலிங்கமாக கூட செய்து உபயோகிக்கலாம். இது முப்பு எனும் அடிப்படைக் கொள்கையை கொண்டு தயாரிப்பதால் இதை அர்த நாதீஸ்வர குளிகை என்று கூறுவதுண்டு.

இதை உடலிள் தரிப்பதால் ஞானம் கிடைக்குமா என்று எமக்கு தெரியாது ஆனால் பல கடுமையான ரோகங்களை இது போக்கும் என்பது உறுதி.

saramani3

மெழுகாக இருக்கும் இதை சாரணைகள் செய்வதன் மூலம் தேவையான குளிகையாக மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வெறு சாரனையும் கோழிப்புடம் இடல் வேண்டும், சுமார் 10 முறை சாரணைக்கள் கொடுத்தால் வேகமான குளிகையாக இருக்கும். இது இராமதேவர் செய்த குளிகைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்