சூட்சும சவர்காரம்

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

முப்பூவின் ஆய்வில் பல இரகசியங்கள் அடங்கி இருப்பது பலருக்கும் தெரியும் அதில் ஒன்றைப்பற்றி பார்க்களாம்.

துடிகொண்ட முப்பூவின் விபரம் கேளு சோதியுப்பு ஆதிதனை செப்பக்கேளு முடிகொண்ட வழலைஎன்றும் கல்லுப்பென்றும் முனையான சுழினையென்றும் வண்ணான் என்றும் படியானபடிகி என்றும் குடுகுடானை பங்கயத்தின் பூவென்ரும் பாருப்பென்றும் வடிவான ஆகாசபுரவி என்றும் மகத்தான மவுனமென்றும் வயங்கும் பேரே..

இப்படி பல பெயர்களால் அழைக்கப்படும் ஓர் சூட்சுமத்தின் காட்சிதான் இது.

பேர்கொண்டவடிவானவிந்து என்றும் பிலத்தநீருப்பென்றும் வாரிதிதானென்றும் மேகமென்றும்… இப்படி இதன் மகிமை செல்கிறது.., உண்மையுள்ள அடியென்றும் சக்தியென்றும் தன்மையுள்ள பூமியின் நாதமென்றும்.. பொல்லாத விஷமென்றும் ஊசிநீர் என்றும் இதற்கு பெயராம்.

எமது மாணவர் திரு ஜெயகுமாரின் ஆய்வில் இருக்கும் செயற்திட்டங்களில் இதுவும் ஒன்று.

இதைத் தான் சூக்கும சவர்காரமாக சித்தர்கள் மறைத்திருக்கிறார்கள். இதை சரியாக புரிந்து கொண்டால் பல இரகசியங்களுக்கு பதில் கிடைக்கும்.

போமேதான் பஞ்சபூதம் இதிலொடுக்கம்பாரு போக்கான வாயுதனில் தேயுமிகச்சார்ந்து
வேமேதான் தேயுவிலே உப்புமிகக்கலந்து வேகமுடன் ஆவிதனை விளைவிக்கும்பாரு
தாமேதான் பிரிதிவிதனில் ஆகாஷமொடுங்கி தாரிணியின் உள்ளடக்க பெட்டிமிகவாச்சு
நாமேதான் சொன்னபடி பஞ்சகர்த்தால் நாட்டினேன் தேவரதம் நாட்டினேனே.

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்