..முடிவான தென்ன முழுதும் அரூபமே..”

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

எமது இரசவாத மாணவர் திரு ஜெயகுமார் அவர்கள் தொடர்சியான வெற்றிப்படிகளை எட்டிக் கொண்டிருக்கிறார். அதன் சான்றுகள் இங்கு காட்டப்படிகிறது.

ஒரு சில சித்தர் பாடல்களை வைத்துக் கொண்டு அதன் பரிபாடல் புரியாமல் புலம்பித்திரியும் பல வாசகர்களுக்கும் இது ஓர் சாட்டை அடியாக இருக்கும்.

சித்தர்கள் என்ற சான்றோர்கள் காட்டிய பல விடயங்கள் இங்கு தெளிவாக காட்டப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்த ஒன்றே.., இருப்பினும் அதை நாம் காட்டுவதை விட எமது மாணவர் செய்து காட்டுவது மிக சிறந்தது அல்லவா…!

சித்தர் பாடல்களின் பரிபாடல் தங்கி இருப்பது இந்த நாத விந்துக்கள், அகார உகாரங்கள், இரவி மதி, உப்பு புளி, எட்டும் இரண்டும் என்ற குறித்த சில விடயங்களையே குறிக்கிறது.

இதன் அடிப்படையை சரியாக ஆராய தெரிந்தவனே சித்தன்.
( விஞ்(ஞானி),) அப்படிப்பட்ட விடயங்கள் தெளிவாக புரிந்தால் அதன் அடிப்படையை வைத்தே கற்ப மருந்துகள் முதல் வாத வைத்தியங்கள் செய்ய முடியும்.

naathavinthu_1

இரசவாதம் என்பது இரசத்தை வைத்து செய்வது தான் ஆனால் அது எந்த இரசம் என்பது கூட பரிபாசையின் உச்சம் என்பது தற்போது புரிந்திருக்கிறது திரு ஜெயகுமார் அவர்கட்கு..

” மயமான ஜோதியடா மவுனப்பிள்ளை
மந்திரமோ ரட்சரத்தின் மகிமைப்பெண்ணு
நயமான நடுமையத் துவாதசாந்தம்
நாதாந்தம் பேரொளியின் நன்மையாலே
ஜெயமான நாதவிந்து திறந்தானென்ன
செப்பாத ஆதியந்தந் தீர்க்கமாகும்
சுயமான சுயம்புவெனத் தெளிந்துகொண்டால்
சுற்றமுள்ள பிரதிட்டை தோன்றுந்தானே..”

“ தானவனாய் நின்றுதவஞ் செய்யவேனும்
சற்குருவின் தரிசனத்தை காணவேனும்..”

naathavinthu

இப்படி சுயம்பான விடயங்கள் எது என சரியான தெளிவு கிடைத்தால் அதுவே இறைவனின் வீடு.. சற்குரு என்றால் தலைப்பாகை கட்டிக் கொண்டு மேடையில் பேசி பணம் சம்பாதிப்பவன் அல்ல.. ஏழ்மையில் இருப்பினும் இயற்கையில் இணைந்தவனாக இருக்க வேண்டும்..

வாசி என்ற பேரில் மாரடைப்பை ஏற்படுத்தும் பயிற்சிகள் செய்யும் முட்டாள்களுக்கு என்ன புரியப்போகிறது..! பாடல் எழுதியவன் எல்லாம் சித்தனும் அல்ல அதை படித்தவன் எல்லாம் ஞானியும் அல்ல..

” நடுவான போதம்  நாதம் நிறைந்தது
சடமான தில்லாச் சண்முகம் ஆனது
அடியான மூலம் ஆதி நிராமயம்
முடிவான தென்ன முழுதும் அரூபமே..”

இங்கு பல ஆய்வுகள் செய்து அதன் காட்சிகள் உங்களுடன் பகிர்வதில் மகிழ்சி..

இந்த தவத்தின் பலனை தந்த எமது சான்றோருக்கும் எனது தாய் தந்தைக்கும் இந்த காட்சிகள் சமர்பணம்.

விரைவில் எமது இணையத்தின் மூலம் பல பாடநெறிகள் ஆரம்பமாக இருக்கிறது. அதில் நீங்கள் பலரும் கற்றலை ஆரம்பிக்கலாம். அதற்கான வேலைகள் துரிதமாக செயற்படுகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி..

சிவஸ்ரீ  மா கோ முதலியார்
சித்த மருத்துவர்