பகிரதன் அழைத்த ஆகாய கங்கை……

குருவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

நணபர்களுக்கு வணக்கம்

சித்தரியலை கற்க ஆரம்பித்திருக்கும் ஒரு மாணவனாக குருவின் அருளால் முயன்று பெற்ற ஒரு அரிய முயற்சியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பாதம் பிடித்து பதம் அறிவார்க்கு

வாதமும் சித்தி மந்திரமும் சித்தி

போதமும் சித்தி பூரணமும் சித்தி

நாதமும் விந்தும் நடுநிலை முத்தியே…

குருவருளாலும் இறையருளாலும் ஆய்வு செய்து பெற்ற இந்த நீர் சிவ நீராகும். இதன் சிறப்பை எடுத்துரைப்பது எளிதில் இயலாது, முத்தோசங்களையும் நீக்கும் இது அந்த ஏகனின் அநேகங்களில் ஒன்று ஒரு தனித்தன்மையான சுவையும் மணமும் கொண்ட அற்புதமான கற்ப மருந்து. குருவின் வழிகாட்டலோடு அறிய முடிந்தது.

என் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் எளிமையாக விளங்கியதால் மட்டுமே இதை பெற முடிந்தது இல்லையெனில் இந்த பிறப்பில் இந்த சிவகங்கையை நான் தரிசித்திருக்க இயலாது.

தளர்ந்த உடம்பை மீட்டெடுத்து தெளிவான சிந்தனையையும் அமைதியையும் தருவதால் இதை ஆகாய கங்கை என்றார்கள். எனது கற்றலில் மிக பெரிய பாக்கியமாக இதை கருதுகிறேன் குருவுக்கம் என் அய்யன் அண்ணாமலையாருக்கும் கோடி கோடி வணக்கங்கள்.

received_775339579187300நன்றி

ஜெயகுமார் பிள்ளை.