சுத்த கங்கை. எது ஆன்மீகம்..

வணக்கம் தோழர்களே/மாணவர்களே,

இரண்டு நாட்களாக ஓர் ஆய்வில் ஈடுபட்டிருந்தோம் அதன் காட்சிகள் உங்களுக்கு இதோ..

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே..

suththaneer1

இங்கு நுரையும் திரையும் அகற்றும் விதம் காட்டப்படுகிறது.., ஆனால் எதன் நுரை திரை மாற்றப்படுகிறது என்பது பரிபாசையாகவே நாமும் கையாளவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அது தொடர்பாக கேள்விகள் வேண்டாம்.

சுத்த கங்கை என்பது ஒரு முறையில் மட்டுமே பெற முடியும் என்பது அறியாமை.., அதை பல முறைகளில் பெறக்கூடியதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ரோகத்துக்கு பல தீர்வுகள் எப்படி இருக்கிறதோ அதே போன்று இதுவும் அமைகிறது. உதாரணமாக கற்ப மருந்து(கள்) தான் பலவாக கூறப்படுகிறதே.., முப்பூ என்பதே பல பரிமானங்களில் கிடைப்பது தானே.., நாத விந்து, அகர உகரம், ரவி மதி என இவைகளின் சேர்க்கையே அதுவாக இருக்கிறது..

நாத விந்துக்களை பிரித்தல் ஒரு முறை என்றால் அவற்றை சேர்த்தல் இன்னும் ஒரு முறை என நினையுங்கள்.

இங்கு காட்டப்படுவது நாத நீரில் இருந்து விந்துவை பிரிப்பது., நாத நீர் தயாரிப்பது மிக கடினமான செயலாகவே இருக்கிறது, அதற்கான மூலக்கூறு கிடைக்கும் போதுதான் இது சாத்தியமாகிறது, ஆனால் அதுவும் சில இரகசியங்களை பரிபாசைகளை மிக ஆழமாக ஆராயும் போது சாத்தியமாகிறது,.

இரசவாதத்தில் சுத்த கங்கையின் குணம் வேறகவும், கற்ப மருந்துகளில் சுத்த கங்கை வேறாக தோற்றம் தருகிறது., ஏன் வெடியுப்பு திராவகத்தை எடுத்துக் கொண்டால் அதுவே பலவாக கூறப்படுவதும் அதற்காகத் தான்.,

ஆழமான ஆய்வுகள் பார்வை வேண்டும் சித்தர் இலக்கியத்தில். இல்லாது போனால் அவர்கள் அன்று செய்த ஆய்வுகளுக்குள் நாம் சிக்கி வெளிவரமுடியாத நிலைதான் இருக்கும்.

சிலர் கூறுவது பலராமையா, கருணாகர சாமிகள் வேறாக கூறுகிறார்கள் என்று…, அது அவர்களின் அறிவாற்றல் அதை நாம் அப்படியே கையாண்டால் எப்படி வெற்றி கிடைக்கும்.. , சித்தரியல் என்பது ஓர் ஆய்வு கூடம் அதில் இருப்பதை மட்டுமே செய்வது என்றால் அது ஆய்வாகாது..! ஆகவே அதை கடந்து வேறு வழிகளையும் ஆராயவேண்டும்.

அண்டச்சுண்ணம் என்றால் கோழிமுட்டையில் செய்யும் சுண்ணம் இல்லை என்று சில தற்காலத்தில் இருக்கும் முப்பூ ஆய்வாளர்கள் பேச கேட்டிருக்கிறேன், அதுவும் சரிதான் ஆனால் கோழி முட்டையில் செய்யும் சுண்ணம் இல்லவே இல்லை என்று கூறமுடியாது.., மருத்துவ ரீதியாக பயன்பாட்டுக்கு கோழி அண்டச்சுண்ணம் இருக்கத்தான் செய்கிறது, ஏனனில் அதை செய்த்து கொடுத்து அதன் பலனாக குறித்த ரோகங்களை தீர்த்திருக்கிறேன்,, அதே வேலை அண்டசுண்ணம் என்ற பேரில் முப்பூச் சுண்ணம் செய்தும் இருக்கிறேன்.., ஆகவே அவை எந்த இடத்தை குறித்து செயலாற்றுகிறது என்பது மிக தெளிவாக ஆராய வேண்டும்.

ஏகன் அனேகன் என்றால் குறித்த ஒன்றில் மட்டுமே அவன் இருப்பதாக அது அர்த்தம் கிடையாது அல்லவா.. ஆகவே அவன் அனைத்திலும் இருக்கிறான் ஆனால் அவனை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது தான் ஆய்வு.

நீங்கள் சாதாரணமாக கடைகளில் வாங்கும் கற்கண்டில் அவன் இருக்கிறான் அதில் இருந்து அவனை எப்படி வெளியில் கொண்டுவருவது என்பது உங்கள் ஆய்வின் வெற்றி..

எனது குருமார்களில் ஒருவர் இவ்வாறு கூறுவார்..” சிறிப்பவள் எல்லாம் படுக்கைக்கு உதவாள்” இதன் அர்த்தம் பல ஆண்டுகளாக எமக்கு புரியாமலே இருந்தது., அவரின் சமாதிக்கு பின்னர் அதன் விடை கிடைத்தது.., மிக ஆழமான பரிபாசைதான் இதுவும், அவர் இரசவாதத்தில் சிறந்தவர் ஆனால் கற்பம் உண்பதில்லை கேட்டால் இதை தான் கூறுவார்.. 127 ஆண்டுகள் வாழ்ந்தார் பின்னர் அவரே சமாதியானார். சமகாலத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் வாழ்ந்து மடியவேண்டும் இல்லாது போனால் நாம் காட்சிப் பொருளாகவே வரும் சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்படுவோம்..,

கற்ப மருந்துகள் உண்பது ரோகமற்ற ஓர் உடல்னிலையை வைத்திருப்பதற்கு என்ற அறிவை கொண்டு ஆராய ஆரம்பித்தால் பல விடைகள் கிடைக்கும்.., தன்னை அறிந்தவன் தன்னை மறைப்பான் என்று ஒரு தோழர் கூறினார், ஆனால் இன்று தாங்கள் ஞானம் பெற்றுவிட்டோம் வாருங்கள் உங்களுக்கும் ஞானம் கிடைக்கும் வழியை காட்டுகிறோம் என்றுதானே இந்த ஆசாமிகள் மடாதிபதிகள் கூவி வியாபாரம் செய்கிறார்கள்.. அவர்களிடம் போகும் மக்களுக்கு அறிவுரை கூற மாட்டார்கள் இவர்கள், ஆனால் நோயற்ற வாழ்வை வாழ மருந்துகளை தயார் செய்து உடலை காத்து மகிழ்சியாக இல்லறத்தில் இருந்து மோட்சம் பெருங்கள் என்றால் எம்மிடம் பேச வருகிறார்கள்., காரணம் அங்கு பேச முடியாது பேசினால் இவர்கள் ஆயுள் சில வாரங்களுல் முடிந்துவிடும் என்ற பயம்.

நாம் இங்கு யாருக்கும் ஞானம் போதிக்க வில்லை, மருந்துகள் தான் போதிக்கின்றோம். அதுவும் சித்தர் வம்சத்தில் வந்த மருத்துவர் என்ற ரீதியில் செயலாற்றுகிறோம், அதற்கான ஆதாரங்கள் பல தந்திருக்கிறோம், பரிபசையாக இருக்கும் விடயங்கள் நீங்கள் கூறுவது மட்டுமே சரியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமும் கிடையாது நாம் கூறிவது போல மட்டுமே இருக்கிறது என்ற அர்த்தமும் கிடையாது.., ஆனால் நாம் அவற்றை செய்து காட்டுகிறோம் அல்லவா.., அதை போல் உங்கள் ஆய்வுகளையும் செய்யுங்கள் பதிவிடுங்கள், சரியானதா இல்லையா என்ற விடயத்தை அதன் குணத்தை வைத்து முடிவெடுங்கள்.,

எம்மிடம் மந்திரம் பயிலும் மற்றும் கேட்கும் அணைவருக்கும் கூறுவது.. மந்திரத்தால் மாங்கனி கிடைக்காது இருந்தும் அவர்கள் பற்றுதல் அதில் இருப்பதால் அதை பதிவிடுவதும் செய்கிறோம், ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் பொருப்பாக முடியாது., வியாபாரம் செய்வதற்கு இன்று இலகுவான ஓர் விடயம் இந்த மாந்திரீகம், ஆனால் அதன் பலன் எவ்வாறு என்று யாரும் அறுதியிட்டு கூறமுடியாது.,

அர்ச்சுணனுக்கு பின்னர் எவரும் இங்கு தவம் இருந்து வரம் பெற்றதாக எந்த கதையும் இல்லை, ஏன் நீங்கள் மந்திர உபாசனைகள் செய்வதில்லையா.., ஏன் கடவுள் வரம் தர வரவில்லை….! சிந்தியுங்கள்..

இன்று சாபம் கொடுக்க முனிவர்களும் இல்லை, சாபவிமோட்சனம் தர அவதாரங்களும் இல்லை, பெற்ற பிள்ளைகளே நமது சொல் கேட்பதில்லை என்ற காலத்துக்கு வந்துவிட்டோம்.. சிந்தியுங்கள்..,

நாம் ஆன்மீகத்துக்கு எதிரானவர் அல்ல.., ஆனால் நீங்கள் கூறுவது ஆன்மீகமா என்பது தான் கேள்வியே..! நான்கு பாடல் எழுதிவிட்டால் பதியம் படித்துவிட்டால் அது ஆன்மீகமா.. தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு கொடுக்க முடியாதவன் ஆன்மீகவாதியாக இன்று இருக்கிறான்..,

நாம் தமிழர்கள் ஏழ்மையில் பாடுபடுகிறோம், தமிழ் சாமியார்கள் இங்கு கோடியில் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் ஏன் அவர்கள் இந்த தமிழனுக்கான தனது முழு சொத்துக்களையும் கொடுத்து ஓர் புதிய முயற்சியை ஏற்படுத்தக் கூடாது.., சாமியார் மடங்களில் நீச்சல் தடாகம்.. நாமோ குடிக்க தண்ணீர் இல்லாமல் அலைகிறோம்.., இதை கேட்க எவனுக்கும் இங்கு நாதி இல்லை ஆனால் சித்தர்கள் மருந்துகளை கூறினால் அதை பற்றி விவாதிக்க வேட்டியை ………………………… கொண்டு வருகிறார்கள்..

உங்கள் அறியாமை எதில் இருந்து ஆரம்பிக்கிறது.. எவன் பணம் வைத்திருக்கிறான் என்ற அடிப்படையில் இருந்து தானே..!

நீங்கள் எந்த அளவு இறைவனை நேசிக்கிறீர்கள் என்பது இங்கு அவசியம் அல்ல.., இறைவன் உங்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பதில் தான் இருக்கிறது.., ஆயிரம் ரூபாய் கொடுத்து அபிசேகம் செய்தால் தான் அவனின் பார்வை நம்மீது இருக்கும் என்றால் அவன் இறைவன் அல்லவே.., அவன் வியாபாரியாக நீங்கள் அவனை பார்ப்பதால் தான் அவன் உங்களை பணத்தை வைத்து விளையாடுகிறான்.., குழந்தையின் சிறிப்பில் இல்லாத இறைவனா ஆலயத்தில் கல்லிள் இருக்கிறான்..!

உடலை உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு ஆலய, ஆச்சிரம தரிசணம் தேவையில்லை, பசியில் இருக்கும் உயிருக்கு உணவு கொடுத்தால் போதும், நோயில் அவதியுற்று இருக்கும் ஒருவரை குணம்டைய செய்தால் போதும்.., கல்வியில்லாமல் இருக்கும் குழந்தைக்கு கல்வியை கொடுத்தால் போதும்.. இதை விடுத்து தொந்தி வளர்க்கும் குருக்கள், ஐயர்கள், சாமியார்களுக்கு தட்சனை கொடுப்பதை நிறுத்துங்கள்..

ஆன்மீகம் என்பது உண்மையை உணர்வது.. அதற்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் அது உங்களுக்கு புரியவேண்டும். ஆன்மீகத்தை இங்கு யாரும் யாருக்கும் போதிக்க முடியாது, உணர்த்தவும் முடியாது.., அப்படி உணர்த்துவதாக இருந்திருந்தால் சங்கரரின் வருகைக்கு பின் இங்கு ஆன்மீகம் மட்டுமே இருந்திருக்கும்..

உங்களை நீங்கள் அறிவதற்கு ஒரே வழி மக்கள் தொண்டு.., அதுவே மகேசன் தொண்டு.. இராமகிருஷ்ணருக்கு விவேகாந்தன் இருந்தார் அவருக்கு யாரும் இருக்கவில்லை ஏன்.. இங்கு ஆன்மீகத்தை உணர்த்த முடியாது, நீயாகவே உணரவேண்டும்.. அதுவே இராமகிருஸ்ணர் விவேகானந்தருக்கு கொடுத்த தீட்சை.., தீட்சை கொடுத்தவரும் இறந்தார் பெற்றவரும் இறந்தார்.. இதை சொன்னால் நாம் ஆன்மீகத்துக்கும் சமயத்துக்கும் எதிரானவர்…

பணத்தை வாங்கிக் கொண்டு கடவுளை காட்டினால் தான் மக்கள் இன்று நம்புகிறார்கள் அது கடவுள் என்று..

ஒரு சிறு முயற்சி.. திருப்பதியில் இனி யாரும் தட்சனை போடமுடியாது, பணம் செலுத்த முடியாது, அனைத்தும் இலவசம் பிரசாதம் துளசி தீர்த்தம் மட்டும்.. எந்த நேரமும் தரிசணம் காணலாம் என்று ஓர் அறிக்கையை ஏற்படுத்திப்பாருங்கள்.., சில மாதங்களில் திருப்பதியில் ஈ காக்கா கூட இருக்காது.. ! இது இன்றைய ஆன்மீகம்..

இப்படியே முப்பூ என்பதுவும் இலகுவில் கிடைக்காது என்றால் தான் அதற்கு மரியாதை., சுந்த கங்கை அதுவா அது அமிர்த்தம் கோடியில் ஒருவனுக்கு தான் கிடைக்கும் என்று கூறுவதுதான் பரிபாசை..

மறைக்கப்படும் காலம் வரைதான் அவை மரியாதை பெரும்., ஏன் மேலை நாட்டு பெண்கள் அரை நிர்வானமாக கடற்கரையில் குளிக்கும் போது ஏற்படாத மோகம் சாரி கட்டிக் கொண்டு நடனமாடும் நடிகைகளை பார்த்தால் ஏற்படுவது ஏன்.., மறைக்கப்படும் பொருள் எப்போதும் மரியாதையாக கருதப்படுவது அதனால் தான்.., இந்த உதாரணம் தான் உங்களை சிந்திக்க வைக்கும் என்பதற்காக பதிவாகிறது.. ஐயாவுக்கும் அப்படித்தான் என்று முடிவெடுத்தாலும் பரவாயில்லை ஆனால் அது உங்களுக்கு இல்லை என்று கூறவேண்டாம்..

பட்டினத்தார் கூறியது போல்.. :” எத்தனை பேர் கடித்த முலை, எத்தனை பேர் இட்ட குறி” ஆனால் அது மறைவாக இருக்கும் வரை அந்த பட்டியல் தொடரத்தான் செய்யும்.., இதற்கு பட்டினத்தாரும் விலக்கு இல்லை, அவர் கடித்த பின்னும் இட்டபின்னும் தான் இதைச் சொன்னார்..

சிந்தியுங்கள்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. கயிலையை கண்ட அவ்வையின் வரிகள்..

மாடி வீடுகள் கட்டுவதற்காக ஆசிரமங்களை ஆசாமிகளை நாடுவதை விடுத்து உங்கள் குழந்தைகளையாவது சரியான பாதைக்கு செல்ல வழிகாட்டுங்கள்.

போக்கும் வரவும் புணர்வும்யி லாப்புண்ணியனே…

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்