திருமூலர் கூறிய பால்…

வணக்கம் தோழர்களே,

பாடலுக்கான பதிவுகள் ஒரு சிலர் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள்.., பரவாயில்லை. ! மக்களின் மன நிலை தெரியும் தானே.. ஏதாவது மந்திரத்தை பதிவிட்டால் வரும் கருத்துக்கள் உண்மையை கூறினால் வருவதில்லை..

இருப்பினும் நாம் இது பற்றி பார்க்களாம்…

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே…

விளக்கத்துக்கு வருவதற்கு முன் தோழர் ஒருவர் இப்படி கூறுகிறார்…

Senthil Kumar கல்ப ஆய்வாளர்கள் இவ்வாறு தவறாக அர்த்தம் கொள்வார்கள் என்பதாக குறிப்பிட்டிருக்கிறேன்

அது என்ன கல்ப ஆய்வாளர்கள்… ஓ கற்பம் பற்றி கூறுகிறாரோ.., சரி அப்படியே இருக்கட்டும், ”தவறாக அர்த்தம் எடுப்பார்கள்” என்றால்… யார் சரியாக அர்த்தம் எடுப்பார்கள்..! யாராவது திருமூலரின் பேரன் இங்கு இருக்கிறாரோ..!

இதுவரை யாராவது திருமந்திரத்தை படித்து அதில் இருப்பதை புரிந்து பயிற்சி செய்து காலனை வென்றார்களா…! திருமூலரை விட்டு…!

விளக்க உரை எழுதியவர்கள் ஏன் இறந்தார்கள்.. அவர்களுக்கு விளங்கவில்லையோ… அப்படியானால் அது எப்படி விளக்க உரையாக அமையும்.

இங்கு நாம் புரிந்து விட்டதாக கூறப்போவதில்லை, காரணம் நாம் இன்னும் எமது ஆயுளை வென்றதற்கான சாட்சிகள் இல்லை.. ஆனால் இன்னும் 40 ஆண்டுகள் பின் அவற்றை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும்.. ஆயுள் நீடித்தால் நரை திரை ஏற்படாமல் இருந்தால்.. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்..

ஆனால் தற்போது இருக்கும் விளக்க உரை கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருப்பது ஆனால் அதை பயிற்சி செய்தவன் எவனும் தற்போதைக்கு தனது சுய ஆயுளை வென்றதாக சாட்சிகள் இல்லை, அதனால் நாம் அது தவறான விளக்கம் என்று நிச்சயம் கூறமுடியும்..

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே..

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே..

திருமந்திரம் இரகசியங்களை தன்னகத்தே கொண்ட ஓர் பாடல் தொகுதி, மிக தெளிவாகவும், மிக மறைவாகவும் கூறப்பட்டிருக்கும். இதில் அடங்கியவை என்ன என்ற ஆய்வுக்கு முன் நாம் செய்ய வேண்டியது இத்தனை காலமும் அதன் பார்வை ஒரே திசையில் இருந்தது அதனால் இங்கு யாரும் நோய் இல்லாமல் வாழவும் இல்லை, துன்பங்கள் இல்லாமல் வளரவும் இல்லை, ஆகவே அதை மாற்றி சிந்திக்க வேண்டும்.

குண்டலினியை பயிற்சி செய்து சிதறிப்போனவன் தான் இங்கு இருக்கிறார்கள்..

நாம் குறித்த பாடலுக்கான விளக்கம் பற்றி எமது புரிதலை சொல்வதானால்..

காயத்தினுள்ளே காணலாங் கதிர்மதி
காயத்தினுள்ளே காணலாஞ் சுடரை
காயத்தினுள்ளே காணலாம் முப்பூ
காயமே பூமி தானது வாச்சே..

இது சட்டை நாதரின் திருமந்திரம்.. இங்கு காயம் என்பது எதை குறிக்கிறது என்று தெளிவாக இருக்கிறது.., திருமந்திரம் மூலர் மட்டும் எழுதியதாக நீங்கள் நினைத்தால் அது எமது தவறு அல்ல..,

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே…

vinthu niir

பூமியை இயக்கும் பூதங்களை கையாளத்தெரிந்தால் அவை பால் என்று கூறும் கங்கையை சிவநீரை தரும் என்று சிந்தியுங்கள்..

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே..

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே…

பூ என்பது என்ன என்று தெரிந்தால் பல விடைகள் கிடைக்கும்..

சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்..

பாலாய் சொறிந்தது எமக்கு இதுவே.. நீங்களும் காணலாம்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்