நாய் என்றால் கூடாதா… ஞானக் கடவுளே நாயில் தான் இருக்கிறார்

நாம் பயனத்தில் இருந்த காலப்பகுதியில் பல விடயங்கள் இங்கு கருத்தாக பதிவாகியிருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு மகிழ்சி..

சித்தர்கள் என்று நீங்கள் யாரை வைகைப்படுத்துகிறீர்கள் என்ற அடிப்படையில் தான் உங்கள் கேள்விகளுக்கான விடைகளை தரமுடியும்..

பட்டிணத்தார் ஓர் சித்தர் அல்லவே அல்ல….! பாம்பாட்டியாரும் அப்படியே…! இந்த பட்டியல் இன்னும் அதிகமாகவே செல்லும்..

சரி உங்கள் கேள்விகள் எமக்கு புரிகிறது.. கண்ணதாசன், பட்டுக்கோட்டை, ஏன் வாலி, வைரமுத்து வரை புரியாத பாடல்கள் பாடியது இருக்கிறது அல்லவா…!

அவ்வைக் கிழவி ஓர் சித்தர் ஆனால் அவரை இங்கு நீங்கள் பட்டியல் செய்வதில்லை ஏன்..!
வினாயகர் அகவல், அவ்வையின் குறல், இவை இரண்டையும் சேர்த்தே திருமந்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது… முடிந்தால் இல்லை என்று கூறுங்கள் பார்க்களாம்….

கல்வி என்பது அவரவர் பார்வையின் அடிப்படையில் இருப்பது அதை வைத்தே தெளிவு இருக்கும்.. ஆனால் உண்மை என்பது அப்படி அல்ல, யார் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அது மாறாது..

தங்களது ஆய்வுகள் எதை அடிப்படையாக இருக்கிறது என்பதைப் பொருத்தே விடைகள் இருக்கும்..

பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம் இவைகள் அனைத்தும் பொதுவானவை கற்பம் உண்டாலும் சரி.. அவை அப்படியே..

உதாரணமாக தேவர்கள் அமிர்த்தம் உண்டவர்கள் (கற்பம்) அல்லவா.. ஆனால் அவர்கள் படாதா பாடு இருக்கிறதா.. இதை அடிப்படையாக கொண்டுதானே அவதாரங்கள் இடம்பெருகின்றன என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்..

ஞானம் தேடி அலைவதற்கு முன்னர் சிந்திக்க வேண்டியது நீங்கள் வழிப்பாட்டுக்கு எடுக்கும் எந்த ஓர் அமானுசத்துக்கும் பிரச்சினை இருந்திருக்கு அதனால் தான் அதை பற்றி புராணம் கூருகிறது.. புராணம் என்றால் பிரச்சினைகளை கூறுவது தானே..

தேவாதி தேவர்கள் இந்திரன் முதல் அனைவரும் இந்த நியதிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது சமயம்.. ஆனால் ஞானம் பெற்றதாக கூறும் இந்த ஆன்மீகவாதிகள் இறவாமல் இருக்க வழி கூறினால் எப்படி..

தவம் இருந்த வரம் பெரும் போது இறவா வரம் மட்டும் கேட்க முடியாது என்று தானே புராணங்கள் கூறுகிறது.. ஆனால் எப்படி இறக்க கூடாது என்று வேண்டுமானால் கேட்க்களாம்.. இது இல்லை என்று இங்கு உங்களால் கூற முடிந்தால் நாம் உங்கள் கருத்தை ஏற்கின்றோன்ம்,,,..!

சமயம் பற்றியும் தெரிவதில்லை, சித்தர்கள் பற்றியும் தெரிவதில்லை, ஞானம் பற்றியும் புரிவதில்லை, யோகம் பற்றியும் அறிவதில்லை ஆனால் எழுதவும், பேசவும் மட்டும் தெரியும் பலருக்கும்..

ஒன்று சமயம் பற்றி பேசுவதானால் அது தொடர்பான ஆற்றல் வேண்டும், அல்லது சித்தர் பற்றி பேசுவதானால் அது தொடர்பான ஆற்றல் வேண்டும்.. இங்கு பலதும் அறைகுறையாக இருக்கு ஆனால் கேட்டால் கோபம் மட்டும் வருகிறது..

திருமூலர் என்ற நபர் இருதியக பதிவிட்டது..

Thiru Moolan வணக்கம் இலக்கியம் ஐயா நலமா
இன்னும் சொல்ல வேணடியது இருந்தால் அதையும் சொல்லுங்கள்.
என்னை நாய் என்று விமர்சனம் செய்துள்ள சகோதரருக்கும் நன்றிகள்.

அவர்கள் பதில் கூறுங்கள் என்று கேள்விகள் கேட்டார்கள் அதற்கு பதில் கொடுத்தால் இப்படி கூறிகிறார்கள்… தங்களுக்கு ஞானம் கிருக்கிறது என்றுதானே பாடல்கள் எழுத ஆரம்பித்தார்கள்.., ஞானம் இருந்தால் பதில் வந்திருக்க வேண்டும்,, ஆனால் அவராகவே நட்பு வட்டத்தில் இருந்து விலகிவிட்டார்..

அவரின் ஞானத்தை பார்ப்போம் இருதியாக… நாய் என்று தன்னை பேசியதாக கவலை கொண்டிருக்கிறார் அவர்.. திருமந்திர ஆசிரியர் பெயரை வைத்துக் கொண்டு இந்த கவலை அவருக்கு.. உண்மையான திருமூலர் அவரை அவரே தான் நாய் என்கிறார் அதை விட கீழாக இருப்பதாக கூறுகிறார் திருமந்திரத்தில்.., மாணிக்கவாசகரும் அப்படியே.., ஆனால் இவருக்கு ஞானம் இருக்கிறதாம் ஆனால் நாய் என்றது பிடிக்கவில்லை இவருக்கு…

ஆன்மீக வாதி இவர் ஆலயத்துல் இருக்கும் வைரவர் என்று தன்னை கருதியிருந்தால் இந்த கவலை வந்திருக்காது ஆனால் ஞானம் இருக்காம் இவர்கலுக்கு.. மிக சிறந்த ஞானம் இது.. இப்படித்தான் இருக்கும் இவர் பாடல்களும்…

இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை இவர்களுக்கு..

விடயத்துக்கு வருவோம்.. Jey Vel தம்பி, உங்கள் ஆய்வுகளை சற்று திசையை மாற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.. பல விடைகள் கிடைக்கும்..

Barani Dharan ஓம் நாத விந்து கலாதி நம அம்…., கற்பக விநாயகரின் அமுரி என்ற அமுர்தகலசத்தை அரி ஒம் ….

இவற்றுக்கு என்ன அர்த்தம்..! அமுரிக்கும் வினாயகருக்கும் என்ன உறவு..!

சற்று விளக்கம் தந்தால் நாங்களும் கற்றுக் கொள்வோம்..

அப்படியே வாசகர்கள் R Shashank Krishna இந்த சிறுவனின் கருத்துக்களை பெரிதாக எடுக்க வேண்டாம்.. 14 வயது சிறுவன் சற்று உணர்சிவசப்பட்டு பேசிவிடுவார்.. கற்றலின் ஆர்வம் இருப்பதால் சில அவசர பதிவுகள் வருவது அவரிடம் இருந்து இயல்பாகிவிட்டது.. இனி அப்படியான கருத்துக்கள் வருவது குறைவாக இருக்கும்..

மேலும் எமது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ஆசாமிகளின் தத்துவத்தை படங்களை பகிவதை கண்டால் அவர்கள் எமது நட்பு வட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..

ஜக்கி, நித்தியா, அம்மா, அப்பா, சர்மா, சாய், இப்படி இவர்களின் கருத்துக்கு இணைந்தவர்கள் எமது நட்பு வட்டத்தில் இருக்க வேண்டாம்..

நீங்கள் இழிவாக இருங்கள் எம்மை அதில் சேர்க்கவேண்டாம்..

உங்கள் வாழ் நாளில் உங்கள் பெற்றோர் எத்தனை அறிவுரைகள் கூறினார்கள் அவர்களின் உபதேசங்களை அவர்களின் படங்களை போட்டு எழுத உங்களுக்கு முடியாது ஆனால் எவனோ ஒருத்தன் ஒருத்தி உங்களுக்கு பெரிதாக இருக்கிறது..

எமது நட்பு வட்டத்தில் இருக்கு அணைவருக்கும் ஓர் அறிவுரை நாளை முதல் உங்கள் தாய் தந்தையர் கூறிய அறிவுரைகளை பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும், அப்படியே உங்கள் தாய் தந்தையை அவர்களின் அறிவுரைகளை நீங்களும் மீட்டிப்பார்த்தாக இருக்கும்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்