கேள்வி கேட்பவன் கூடாது என்று ஒதுக்கும் சமய வாதிகள்..

வணக்கம் தோழர்களே,

மக்களை நாம் குழப்பியதாகவும், அகம்பாவத்தோடு பேசியதாகவும் திருமூலரின் வாசகர் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்… நல்லது அப்படியே மருந்து விற்பதற்கு கடை விரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.., அதுவும் நல்லது…

இதில் விடயம் என்னவென்றால்.. நாம் திருமுறைகளை சுட்டிக் காட்டினோம்.. அதில் இருக்கும் தவறுகளை பதிவிட்டோம்.. ஆனால் அதற்கு இவர்கள் எவரும் பதில் தருவதாக இல்லை..

எந்த கொம்பனாலும் முடியாது என்றோம்.. மரணத்தை வெற்றிகொள்ள ! அதுக்கும் இவர்களிடம் சாட்சிகள் இல்லை..

ஞானம் ஆசையின் உச்சக் கட்டம் என்றேன்.. அது இல்லை என்று கூறுகிறார்கள்… நாட்டில் ஞானம் இருக்கும் சாமியார்களின் வங்கி இருப்பு அதற்கு எடுத்துக் காட்டு… அப்படியே ஞானம் இருப்பவர்கள் தங்களை மற்றவர் பின்பற்றி வரவைப்பது எதன் அடிப்படையில்..

ஆசையை எப்படி நீங்கள் வகைப்படுத்துகிறீர்கள் என்று கூறுங்கள்.. அதை வைத்து பேசலாம்..

அப்படியே நாம் இறை மறுப்புக் கொள்கை உடையவர் என்கிறார்கள்.. அப்படியா !!!! உங்கள் வள்ளலார் எந்த கொள்கையை கொண்டவர் என்று சற்று கூறுங்களேன் பார்க்களாம்…

எம்முடன் பேச கூச்சமாக உள்ளதாம் ஒருவருக்கு.. காரணம் நாம் உண்மையை கூறுவதால்.., சிவநிந்தனை கூடாதாம்.. ஏன் கூடாது என்று விளக்கம் தரவில்லை..

இவர்கள் கூறும் எந்த ஒரு விடயத்துக்கும் விளக்கம் காரணம் எதுவும் இல்லை.. ஆனால் சொல்வதை கேட்கவேண்டும், மறுத்துப் பேசக்கூடாது என்று எதிர்பார்கிறார்கள் போல்.

அவர்களின் பகுதறிவு நன்றாக உள்ளதாம், எமது தான் பிரச்சினையாம் என்கிறார்கள்.. நல்லது தான்.. உங்களைப் போல் இருக்கும் அறிவை விட இது மிக சிறந்தது.. அப்படியே எம்மை நன்றாக மருந்தை அரைக்க பழக சொல்லியிருக்கார் ஒருவர்.. அரைக்க ஆரம்பித்தால் ஓட்டம் பிடிக்க வேண்டியிருக்கும் உங்களுக்கு.. ! பார்கிறீர்களா..

மணி ராஜ் என்றால் யார்.. ! அவரை தெரியவில்லையா என்று கேட்கிறார்கள்..! இவன் யாராக இருந்தாலும் எமக்கு என்ன..! சிவனைப் பற்றியே நாம் இங்கு பேசும் போது இவர் யார்..! சரி அவரை பார்த்தால் அவரின் காலக்கோட்டில் தனது சுய அடையாளம் தாமரைப் பூ கட்சியின் படத்தை கொண்டிருந்தது.. இது ஒன்று போதாதா.. இவர் யாராக இருப்பார் என்று தெரிவதற்கு..

மணி ராஜ், சிவமணி இவர்கள் இருவருக்குமே ஒற்றுமை கிடையாது.. பார்க்களாம் எப்படி என்று..

மணி ராஜ் கூறுகிறார் வள்ளலாரின் (இராமலிங்கத்தின்) மரணமில்லா பெருவாழ்வைப் பற்றி படியுங்கள் என்று..

சிவமணி கூறுகிறார்.. இறை மறுப்புக் கொள்கை உடையவராம் நாம் என்று..

ஏன்பா.. இராமலிங்கத்தின் கோட்பாடு என்ன என்று இருவரும் முதலில் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்..

இராமலிங்கதாரின் முகத்திரை கிழிக்கப்பட்டு முன்னமே இங்கு பதிவாகிவிட்டது அதை எமது காலக்கோட்டில் வேண்டுமானால் தேடிப்பாருங்கள்..

இராமலிங்கத்தாரின் அகவல்கள் எந்த சித்தர் பாடல்களை பிரதிபன்னி அவர் எழுதியவை என்று முன்னமே அட்டவனை போட்டிருகிறேன்..

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று கூறிய இராமலிங்கத்தார் தாமே சிறு தெய்வங்களுக்கு பதியங்கள் செய்திருக்கிறார் தெரியாதா உங்கள் அறிவுக்கு.. அப்படியானால் நீங்கள் தான் அவரின் படைப்புக்களை படிக்கவேண்டும் முதலில்..

நாம் இங்கு எவரையும் ஆன்மீக பாதைக்கு கூட்டிச் செல்லவே இல்லையே… ஆன்மீகம் என்ற பேரில் மத வெறி எமக்கு இல்லையே..

சித்தர்கள் பேரை வைத்துக் கொண்டு இங்கு நாம் சித்தர்கள் கருத்துக்கு புறம்பான செயலை செய்வதாக கூறுகிறார்கள்.. அப்படி என்றால் ஒரு விடயத்தை எடுத்துக் காட்டுங்கள்.. எது புறம்பாக கூறியிருக்கிறேன் என்று பார்கலாம்..

எமது காலக்கோடு காலச்சீர்கேட்டுடன் ஒத்துப் போகிறது என்கிறார்கள் இருதியில்..

அதாவது சமயம் என்ற பேரில் மதவெறியை உண்டு பன்னும் நீங்கள் எமது காலக் கோடு சீர்கேடு என்கிறீர்கள்.. அப்படியானால் உங்கள் காலக்கோடுகள் என்னவோ..!

தேச தந்தை பெரியார் செய்தது காலச்சீர் கேடு என்றால் நாம் அதை செய்வதை பெருமிதமாகவே ஏற்கின்றோம்.. உங்களைப் போல் பதுங்கிக் கொல்லும் மதவெறியர்கள் நாம் அல்ல..

மரணமில்லா பெருவாழ்வே மனிதப்பிறவியின் நோக்கம் என்கிறீர்கள். அல்லவா.. அதற்கு சாட்சியாக சஞ்சீவி மூலிகையும், கற்ப மூலியும் பேசுகிறீர்கள்..

இப்போது நீங்களே சிக்கிக் கொண்டீர்கள்… இரண்டாக இதை பிரித்துக் பேச முடியும்.. உங்கள் அறிவை சிரிப்பாக மாற்ற முடியும் பார்கிறீர்களா..!

ஒன்று.. உங்கள் கருத்துப் படி ஆன்மீகம் உங்களை வாழவைக்க உதவாது அதற்கு இந்த மூலிகைகள் வேண்டும் என்கிறீர்கள், இது மறைமுகமாக இருக்கும் அர்த்தம் உங்கள் வாதத்தில்.. ஆகவே அது இயற்கையில் இருக்கும் மூலிகைகளாக அமைகிறது.. இதை சிவனை வழிபடுபவன் உண்டாலும் மரணமில்லாமல் இருப்பான்.., சிவனை நிந்திப்பவன் உண்டாலும் வாழ்வான் உங்கள் வாக்கின் படி.. அப்படி இருக்க ஏன் தெரியாத ஒன்றை சிவன் என்ற பேரில் கூவி விற்கிறீர்கள்..! இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், மற்றும் வேறு மதத்தவர் இந்த மூலிகைகளை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியாதா.. அப்படி இல்லை என்றால் நீங்கள் கூறிய இவை அப்படியான மூலிகைகளாக இருக்க முடியாது..

இரண்டாவது.. உங்கள் கூற்றுப்படி சஞ்சீவி மூலிகை இருந்தால் மரணமில்லா வாழ்வு கிடைக்கும் என்றால் இராம லட்சுமர்கள் ஏன் இறந்தார்கள்..! போரில் சஞ்சீவி மூலியை பயன்படுத்தி பிழைத்தவர்கள் அதை வைத்து இன்றுவரை இருக்க வேண்டியது தானே.. அப்படியே இது தான் கற்ப மூலிகை என்று உங்களால் அடையாளங்காட்ட முடியுமா.. !

இந்த இராமலிங்கத்தாரின் புராணம் சிவபுராணத்தை விட பெரியதாக உள்ளது..
இராமலிங்கத்தாருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.. அவர்களின் மௌனம் இவர்களை இப்படி பேச வைக்கிறது. அது போக இந்த ஒளிவடிவாக மாறிய இவர் ஏன் மீண்டும் வந்து இங்கு தொண்டர்களை சந்திக்கவில்லை…! அது போகட்டும்.. குருவானவராக இருந்தால் நிச்சயம் மாணவர்கள் இருக்க வேண்டும்.. அப்படி மாணவர்கள் எவரும் அவரின் பின் ஒளியாக மாறாத காரணம் என்னவோ..! ஏன் முக்திக்கான வழியை கூறமல் போய்விட்டாரா இராமலிங்கத்தார்.. அப்படி இரகசியத்தை ஒருவருக்கு கூட கொடுக்கவில்லை என்றால் அவர் எப்படி குருவானார்..

ஞானம் என்றால் ஆசை அற்றது என்கிறீர்கள்.. ஆசை அற்ற இராமலிங்கத்தார் தம்மோடு சேர்த்து இன்னும் சிலரை ஞான மார்க்கம் கூட்டிச் சென்றிருக்களாமே..! அல்லது அதை கற்பித்திருக்கலாமே.. தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைப்பது ஆசை இல்லையோ.. அப்படி அவருக்கு ஞானம் கிடைக்கவில்லை என்பது தெரிந்த விடயம்.. ஆனால் உங்கள் கருத்து அவர் மகான் என்பதால் கேட்டேன்.. மற்றும் படி அவர் வெரும் இராமலிங்கம் தான்.

என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்… ஆகா ஆகா என்ன அற்புதமான வாக்கு.. ஆமா எத்தனைபேர் இறப்பை இதுவரை ஒழித்தீர்கள் இறப்பை..! ஏதாவது கூறுவதானால் நடந்த விடயத்தை கூறுங்கள்.. வாய்ச் சொல்லிள் வீரரடி பாப்பா என்ற படி சொல்வதை நிறுத்துங்கள்..

இராமலிங்கம் இறந்து பல ஆண்டுகள் ஆயிற்று, அவரின் சீடர்கள் இறந்தும் பல ஆண்டுகள் ஆயிற்று.. இதுவரை எவனும் ஒன்றையும் ஒழித்ததாக தெரியவில்லையே..

இப்படித்தான் நாம் உண்மையை பேசினால் அல்லது கேட்டால் எம்மை கொடுமைக்காரன் என்கிறார்கள் இவர்கள்.. ஆக மொத்தத்தில் ஆன்மீக வழி செல்பவர்கள் கேள்விகேட்க கூடாது, மற்றும் சிந்திக்கும் திறமையை மறந்துவிட்டு இவர்களிடம் சேர வேண்டும்.. இந்த கூத்து இங்கு நடவாது..

” சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.—- வள்ளலார்.-”

ஏன்யா யோவ் முதல்ல நீங்கள் எல்லாரும் ஒரு முடிவுக்கு வாங்க… சமயத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் சமயத்தின் மூலம் ஞானம் கிடைத்து மரணமில்லா பெரு வாழ்வு வாழ வழி கூறுகிறீர்கள்.. ஆனால் சமயம் மதம் இவை இல்லை என்ற ஒருவரை ஞானி என்கிறீர்கள்.. பிறகு சிவனுக்கு பாடல் எழுதுகிறீர்கள்.. என்னையா உங்க கூத்து.. சுயநல அரசியல் வாதிகள் போல் கட்சி தாவும் குணம் இங்கு உங்களுக்கா அல்லது எமக்கா..

” “ அலையவே நாலுவே தத்திலுள்ள
அடைவான குருமார்கள் பொய்கள்சொல்லி
நிலையவே அவரவர்கள் வேதங்கட்டி
நீச்சாஉன் தெய்வம் எந்தெய்வம் என்று
மலையவே மானுடரை மயக்கங்காட்டி
மகிமைபெற இருந்துமே நிட்டைப்போலே
குலையவே காட்டியே அடிமைசெய்வார்
குரூரமாய்ப் பார்த்தறிந்தா லெல்லாம்பொய்யே.” ”

இருதியாக மிஸ்டர் மணிராஜ் அவர்கள் கூறியதுக்கு வருவோம்… ”நான் படித்தது எந்த நூல் என்று உங்களுக்குத் தெரியாது இலக்கியம்.
நீங்கள் அனைத்தும் அறிந்தவர் போல பேசுகின்றீர் மணிவாசர் கூறிய நமசிவாய வாழக என்பதன் அர்த்தம் என்ன என்று உங்களால் கூறமுடியுமா”

நீங்கள் எதை வேண்டுமானாலும் படியுங்கள் ஆனால் உங்கள் தாமரை சின்னம் தெளிவாக காட்டிவிட்டது உங்கள் ஆன்மீகம் எது சார்ந்தது என்று.. அப்படியே மாணிக்கவாசகர் நமசிவாய வாழ்க என்றார்.. ஆனால் அவர் நமசிவாயத்தை கண்டதில்லை என்றார் அதே புராணத்தில்.. அதை நீங்கள் கண்டீர்களா.. நாம் நமசிவாயத்தை பற்றி முன்னமே தெளிவு கொடுத்துவிட்டோம் எமது வாசகர்களுக்கு…

“ வாறான சனங்களுக்கும் ஐந்துபூதம்
மருவியதோ தேவதைக்கும் ஐந்துபூதம்
தாறான அண்டம்எல்லாம் ஐந்துபூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்துபூதம்
குரும்பரே ஐந்தினால் எல்லாம்ஆச்சு
நீறான வேடமிட்டு உபதேசித்த
நிலையெல்லாம் ஐந்தெழுத்தின் நிலையுமாச்சே..”

முடிந்தால் பரிபாசையை புரிந்துகொள்ளும் மணியாரே..!

திருமூலர் என்பவர் எமது நட்புவட்டத்தில் சேர்ந்தார் அதனால் அவரின் பதிவில் இருக்கும் விடயத்துக்கு நாம் கருத்து தெரிவிக்கிறோம், அவர் வேண்டுமானால் எமது பதிவுக்கு எமது முகநூலில் கருத்து தெரிவிக்கும் உரிமை பெற்றிருக்கிறார்.., மற்றவர்கள் நீங்கள் எமது நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் நேரடியாக இங்கு கருத்து பதிய முடியாது.. ஏன் உங்கள் மணிராஜ் அவர்களின் காலக்கோட்டையே அவர் அனுமதிப்பவர்கள் தானே முழுமையாக பார்க்க முடிகிறது..! ஏன் உங்கள் தளத்தில் நாம் எழுத முடியுமா உங்கள் நட்பு வட்டத்தில் இல்லாத போது… இந்த சிறு விளக்கம் கூட தெரியவில்லை சிவமணிக்கு.. பின்னர் சமயம் பற்றியும் ஞானம் பற்றியும் பேசுகிறீர்கள்..

ஏன் உங்கள் காலக்கோடுகளை திறந்துவிடுங்கள் முதலில் அங்கு மற்றவர் என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்களாம்.. ஏன்யா நீங்க செய்யிரது எல்லாம் சரி.. நாங்க செய்றது தப்பா.. எந்த ஊர் நியாயம் இது..

Shiva Mani அவரைப்பற்றி தெரிய வேண்டுமானால் உங்களது பகுதியில் பிறர் தங்களது கருத்துக்களைப் பதிய அனுமதிக்கவும்.
மணிராஜே தான் யார் என்று அங்கு வந்து கூறுவார்.
அடுத்தவருடைய பகுதியில் வந்து சும்மா கத்துவது மனித நாகரிகம் அல்ல இலக்கியம் ஐயா.

சரி நீங்கள் எம்மை பற்றி கூறுவது யாரின் தளத்தில் உங்கள் தளத்திலா.. திருமூலர் எமது நட்புவட்டத்தில் இருக்கிறார் ஆகியால் நாம் அவருக்கு எழுதினோம், அதற்கு அவர் எமக்கு எழுதட்டும்.. நாகரீகத்தை நாங்கள் பார்கிறோம் உங்களுக்கு நாகரீகத்தை யார் கற்பிப்பது மணி ஐயா…!

திருமூலருக்கு நாம் முதல் முறை பதிவு செய்யும் போதே கூறிவிட்டோம் எமது கருத்து பிடிக்கவில்லை என்றால் தாறாலமாக விலகிக்கொள்ளலாம் என்று, அவர் அது தேவையில்லை என்று கூறிவிட்டார். இதில் உங்கள் வாதம் விடயம் தொடர்பானதாக இருக்க வேண்டும், ஆனால் யாரின் தளத்தில் பேசுகிறோம் என்ற கேள்வி உங்களுக்கு தேவையல்ல..

அப்படியே திருமூலர் நாம் வசியமை கற்றுத் தருகிறேன் என்று கடைவிரித்திருப்பதாக கூறியிருக்கிறார்.. அப்படி கற்றுத் தருவதாக கூறி எதை கற்றுத் தந்தோம் என்று கற்றவர்கள் கூறவேண்டும்.. கற்காதவர் நீங்கள் கூறமுடியாது.. நாம் கடையில் பொருளை எந்த விலைக்கு விற்றோம் என்றும் உங்களுக்கு தெரியாது அப்படி தெரிந்திருந்தால் அதை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்.. ஏன் வாங்கினீர்கள்.. !

எங்காவது நாம் சித்தர் என்று கூறியதாக இருந்தால் அதை காட்டுங்கள்.. அப்படியே எமக்கு எது சித்தியானவை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்.. ஏன் நீங்கள் பாடல் எழுத சித்தி பெறலாம், நாங்கள் அஷ்டகர்மத்தில் சித்தி பெறக்கூடாதோ..

சித்தர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் பிரிவினை வைத்திருக்கிறீர்களா.. அகத்தியருக்கு எத்தனை மனைவியர், போகருக்கு எத்தனை மனைவியர்.. தெரியாதா உங்களுக்கு.. குடும்பியும் தாடியும் இருந்தால் தானா சித்தர்கள் என்பீர்கள்.. அப்படியானால் உங்கள் தெருவில் இருக்கும் பலரும் சித்தர்கள் தானே பின்னர் ஏன் மற்ற சித்தர்களை தேடுகிறீர்கள், அவர்களிடம் கேட்டால் ஞானம் கிடைக்கும் வழியை இலகுவாக கூறுவார்களே..

நீங்கள் கத்தியை தவறாக உபயோகிப்பவர் என்பதால் மற்றவர் அப்படி உபயோகிப்பார்கள் என்கிறீர்களா..! எம்மிடம் கற்பவர்கள் கத்தியை விட புத்தியை உபயோகிப்பவர்கள்.. அவர்களுக்கு தெரியும் எது சிறந்தது என்று.

வசியமை கற்பதில் என்ன தவறு இருக்கிறது.. ஏன் உங்கள் ஞானிகள் அதை செய்யவில்லையா.. அவர்கள் செய்யாமலா அது இருக்கும் விடயம் வந்தது.. திருமூலரே.. திருமூலரின் மந்திரமாலை 300 தேடிப்படியுங்கள்… எப்படி எல்லாம் பெண்களை வசியப்படுத்தலாம் என்று தெளிவாக கூறியிருப்பார்..

நாம் கடை விரித்து விற்கும் பொருள் மனிதனுக்கு பலன் கிடைப்பவை, உங்களைப் போல் மாயைகளை விற்பதற்கு கடைவிரிக்கவில்லை.

நீங்கள் ஆன்மீகம் என்ற பேரில் பாடல் பாடலாம், நாங்கள் மருந்துகள் செய்யக்கூடாது.. எந்த ஊர் நியாயம் இது..

வாதம் ஏற்பட்டது சமயம் தொடர்பாக அது தொடர்பாகவே நாம் உதாரணங்களும் கேள்விகளும் கேட்டோம் ஆனால் அதற்கு எவனும் பதில் தரவில்லை, மாறாக உங்கள் பேச்சு வேறுஇடம் செல்வது ஏன்..

சமயம் பற்றி பேசினீர்கள் மரணமில்லா வாழ்வு என்றீர்கள் இதற்கு விளக்கம் கொடுத்தால் இப்போது வசிய மை என்கிறீர்கள்.. நாம் சித்தரா என்று கேட்கிறீர்கள்.. !

” ” வேரான சோதியடா வேரைக்கண்டு
வெகுகோடி சித்தர்தவஞ் செய்தாரப்பா
மாறாத பேரொளியே சொர்க்கம்சொர்க்கம்
மதியான பூரணமே சித்தியானால்
கூறாத கற்பமடா குகரிக்கற்பம்
கூரறிந்து கொண்டவனே சித்தன்சித்தன்
நேராக நின்றவனே அருளைக்கான்பான்
நின்றநிலை தப்பவிட்டால் ஒன்றுமில்லை.””

குமரிக்கற்பம் கொண்டவன் சித்தர் என்கிறார் அகத்தியர்.. அதை நாம் முகநூலில் காட்டியிருக்கிறோம்… அப்படியானால் நாம் யாராகவும் இருக்கலாம்..

நீங்கள் பாட்டை படித்துக் கொண்டிருங்கள், நாங்கள் குமரியை பார்த்துக் கொண்டிருக்கிறோம்…

தோழர்களே, மாணவர்களே.. சிந்தியுங்கள்.. சமயம் என்ற பேரில் இங்கு இருக்கும் ஏழ்மையை இதுவரை போக்கியவன் எவனும் இல்லை, ஆனால் மக்களின் வியர்வையை சுரண்டி அடுக்கு மாளிகை கட்டியவன் அணைவரும் செய்த தொண்டு ஆன்மீக தொண்டு..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..