சமய வெறி கொண்ட அணைவருக்கும்…

வணக்கம் தோழர்களே,

திருமூலர் என்ற தோழர்க்கு நாம் கொடுத்த விளக்கத்துக்கு எதிரான சில கேள்விகள் மீண்டும் வந்திருக்கிறது.. அதற்கு நாம் எழுதிய பதிலுக்கு மீண்டும் கேள்விகள் வந்திருக்கிறது..

சரி சமயம் கற்ற பண்டிதர்கள் பலர் இருப்பதால் அவர்களின் சமய அடித்தளத்தை சற்று ஆட்டிப் பார்க்களாம்.. நீங்கள் சிவ தொண்டர்கள் அல்லவா… சரி உங்கள் சிவ தொண்டைனை வைத்தே இதை செய்யலாம்..

இது சமயத்துக்கு எதிரான கருத்து அல்ல, மாறாக சமயங்களில் இருக்கும் சுய நலத்துக்கு எதிரான கருத்து..

உங்கள் அணைவருக்கும் 12 திருமுறைகள் தெரியும், தெரியாதவன் இங்கு எந்த கருத்தும் பதிய வேண்டாம்.. சைவத்துக்கு அடிப்படையாக கருதும் தமிழ் நூல்கள் இவையே..இவற்றின் பின் இருக்கும் இரகசியங்கள் எத்தனை..,

சிவனுக்கும் அவனின் அடியார்க்கும் தொண்டு செய்து வந்தவர்கள் பாடிய பாடல்கள் திருமுறையாக வகுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் 28 பேர் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது..

இதில் அகத்தியர் எங்கே போனார்…! சைவத்தின் அடித்தளத்தை பூமிக்கு தந்தது அகத்தியர்.. அதனால் தானே சிவனின் திருமணத்தின் போது வடக்கு உயரவும் அதற்க்கு நிகராக தெற்குக்கு அகத்தியரை சிவனார் அனுப்பியதாக கூறினார்கள்.. எந்த அளவு சிவ பக்தி இருந்தால் அவரை சிவன் தமக்கு நிகரான சக்தியாக கருதி தெற்கே சென்று பூமியை சரி செய்ய சொல்லியிருப்பார்… அதன் பின் அகத்தியருக்கு தம்பதிகளாக வந்து நேரில் அருள் கொடுத்தார்..

இப்படி ஒரு சிவனடியார் ஏன் வரவில்லை திருமுறையில்.. ஏன் அவர் சிவனுக்கு பாடல் சூட்டவில்லையா.., அல்லது அவரின் நூல்கள் கிடைக்கவில்லையா..! திருமூலரின் 3000 பாடல் தொகுதி கிடைத்திருக்கிறதே…! எப்படி..!

அது போகட்டும் சைவத்திருமுறைகள் என்றால் அதில் சைவ சமயம் அல்லவா இருக்க வேண்டும்.. ஏன் அதில் சிற்றிலக்கிய நூல்கள் சேர்ந்தன..! அப்படியே நக்கீரனாரின் திருமுருகாற்றுப் படை என்ற பத்துப் பாட்டு நூல் சேர்ந்த காரணம் என்ன..!

சைவத்தில் முருகனுக்கு என்ன வேலை..! அவருக்கு தான் கௌமாரம் என்ற சமயம் இருக்கிறதே… அதில் அல்லவா அது சேர்க்கப் படவேண்டியது.. அதை ஏன் சைவத்துள் சேர்த்தீர்கள்…!
அப்படியானால் சிறந்த தமிழ் புலவர் அவ்வையார், அவர் பாடிய குறல்கள் மற்றும் அகவல் இதில் சேர்த்திருக்களாமே… !

இப்படி இன்னும் பல சிக்கல்கள் நிறைந்தது உங்கள் சைவம்.. அரசியல் கல்ப்பு இல்லாத எந்த ஓர் சமயக் கோட்பாட்டையும் நீங்கள் இங்கு காணமுடியாது., அவை காலத்தின் நலன்கருதியும் அரசின் ஆட்சிகளின் வீரியம் கருதியும் உருவானவை.. அவற்றிள் கசடுகள் குவிந்து கிடக்கும்.. இது அணைத்து மதங்களுக்கும் பொதுவானதே..

இந்த கசடுகள் அற்ற நிலையை கண்டறிந்து, இங்கு இருப்பது ஒன்றே அது இல்லாதிருப்பதான ஒன்று என்ற தனித்துவமான நிலையை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் தங்கள் பாதையை மாற்றியவர்களே சித்தர்கள் என்ற பேர் பெற்றனர்..

“ சாத்திரத்தை சுட்டெரித்தால் அவனே சித்தன்” என்ற வாக்கு அதனால் தான் வந்தது..

இன்று அத்வைதம் என்று பேசும் அனைவருக்கும் இந்த அத்வைத கொள்கையை தாபித்தவர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் தத்துவங்களை பயின்ற சங்கர பகவத்பாதர் எனும் ஆதி சங்கரனார்.. ஆனால் அவர் இந்த அத்வைத கோட்பாட்டை அவரின் சீடர்களுக்கு கூட கற்பித்ததாகவோ உபதேசம் செய்ததாகவோ எந்த சான்றுகள் இல்லையே.. அவர் அதை தொகுத்தார்.. அதன் மீது அவருக்கு நாட்டல் இருந்திருந்தால் அதை அவரே உபதேசித்திருப்பார்.. அது அவருக்கு இல்லை.. ஆனால் பிற்காலத்தில் வந்த சிலருக்கு தாங்கள் வரலாற்றில் இடம்பிடிக்க இது உதவியாக இருந்துவிட்டது..

இந்த கோட்பாடுகள் சித்தர்கள் அல்லது சான்றோர்கள் காலத்துக்கு பின் தங்கிய கோட்பாடுகளாகவே கூறப்படிகிறது..சித்தர்கள் சிவனையும் சக்தியையும் பற்றி கூறிய ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரே இந்த ஆதி சங்கரன் பிறந்தான் இந்த கோட்பாட்டை எழுதி வைத்துவிட்டு இறந்தான்.. ஆனால் அவன் இதை பின்பற்றவில்லை..

வேதங்களின் கூற்றுப் படி சிவலிங்கம் ஆலயத்தில் வைத்து பூசை செய்ய தேவையல்ல.. அவை எங்கும் இயற்கையில் கலந்து இருப்பவை அதனால் தான் அது காடு மேடுகள் என எங்கும் இருக்கின்றன.. அதிலும் வேதங்களின் படி சிவனை எவனாலும் பிரதிட்டை செய்து வழிபடமுடியாது… ஏனெனில் அதற்கு எந்த தேவைகளும் அற்றது என்று பொருள்..

ஒரு பாத்திரத்துள் நீரை ஊற்றினால் நீர் அந்த பாத்திரத்தின் உருவத்தை பெரும், ஆனால் அது ஒளிக்கும் ஒலிக்கும் சாத்தியமற்றது. அதனால் தான் ஓசை ஒளியெலாம் ஆனாய் நீயே என்றார் ஒருவர்..

தேவை அற்ற ஒன்றுக்கு எப்படி கண்கள் இருக்க முடியும்.. பார்க்கும்தேவை இருந்தால் தானே கண்கள் தேவை.. இப்படி அனைத்து உருப்புக்களுக்கும் கேட்டுப்பாருங்கள்.. இறைவன் தேவையற்றவன்.. பேசாதவனுக்கு ஏன் வாய், கேட்காதவனுக்கு ஏன் காது.. இப்படி.. இதனால் தான் அவனை மட்டும் மூன்று நிலைகளில் உவமைப் படுத்தியது வேதங்கள்.. அருவமாய் உருவமாய் அருரூபமாய்..

சிவவழிபாட்டுக்கு உங்களால் சிவலிங்கத்தை மட்டுமே பிரதிட்டை செய்ய முடியும்… நடராசரை அல்ல… காரணம் அது உருவத்திருமேனி.. தேவையற்றவனை எப்படி உருவகமாக பிரதிட்டை செய்ய முடியும்…ஆசை அற்றவன் ஆனால் ஞானத்தை விரும்புவது என்ற விளையாட்டு அங்கு இல்லை..,

இதனால் தான் சித்தர்கள் இந்த கோட்பாடுகளை இங்கு கொண்டுவரவில்லை.. அண்ட பிரமாண்டங்களுக்கும் ஒரே சக்தியாய் ஒன்று இருக்கிறது அது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது அதை தேட முடியாது அது கிடைப்பதும் இல்லை.

கற்பம் உண்டால் அவனே சதாசிவன் என்கிறார்கள் சித்தர்கள்.. அப்படியானால் அவர்களா இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறார்கள், அப்படியானால் அவர்கள் வர முன் இயக்கியது யார்.. !

அவனின்றி அணுவும் அசையாது என்கிறார்கள்.., அவனுக்கு அணுவை அசைக்க வேண்டிய தேவையே இல்லை என்பது தான் சித்தர்கள் கருத்து..

உதாரணமாக இறவன் என்ற ஒருவன் ஒரு சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. கேள்வி..

அவனால் அவனைவிடவும் சக்தி வாய்ந்த ஒன்றை உருவாக்க முடியுமா..? அப்படி உருவாக்கினால் அது அந்த சக்தியை விடவும் பெரியதாகிவிடுகிறது.. உங்கள் இறைவன் இரண்டாவது நிலைக்கு வந்துவிடுவான்..

அப்படி அவனால் முடியாது என்றால் அவனின் சக்தியும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று தானே அர்த்தம்..

ஆகவே இறைவன் என்ற பேரில் இங்கு காட்டப்படுவது நம்பிக்கை மட்டுமே..

உணவு சாப்பிடும் போது அது செமித்துவிடும் என்று நினைத்துத்தான் சாப்பிடிகிறோம்.., ஆனால் அதுவே சில நேரங்களில் செமியாமையாகி விடமாக மாறுவது ஏன்..! சாப்பிட்டால் விடமாகுமோ என்ற சிந்தனை வந்துவிட்டால் எதையும் சாப்பிடாது இறக்க வேண்டும்.. அதைவிட சாப்பிட்டு பார்க்கலாம் என்ற முடிவுக்கு தான் இறைவன் என்ற அர்த்தம்.

கடவுள் என்பது வேறு கடவுள் நம்பிக்கை என்பது வேறு…

இரவில் தூங்கும் போது நாளை எழுந்து இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தான் அனைவரும் தூங்குகிறோம், ஆனால் நமக்கு விடியல் இல்லை என்றால் என்ன செய்வது.. அதற்காக நாம் தூங்காமல் இருப்பதில்லையே..!

கடவுள் என்பது வேறு கடவுள் நம்பிக்கை என்பது வேறு..

இங்கு தான் சித்தர்கள் தங்களின் ஆய்வுகளை முன்னெடுக்கிறார்கள்.. நாளை என்பது நிச்சயமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.., நாம் சதாசிவமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் சதாசிவமாக இங்கு இருப்பது எது அதை நாம் எமக்குள் அடக்கிவிட்டால் நாம் விரும்பும் வரை இருக்கலாம்.. என்ற ஆய்வுகளின் முடிவுகளே… மருத்துவமானது..

இங்கு மறைந்திருக்கும் அந்த சக்தியின் ஆற்றலை கண்டாராய்ந்து அதை உரியவர்கள் மட்டும் பெறட்டும் அல்லாது போனால் பூமியின் சமனிலை பாதிக்கும் என்று என்னி பரிபாசைகளாக செய்தார்கள்.. இவர்கள் இந்த இறை கொள்கைகளை தகர்த்து தாங்களே சதாசிவமானார்கள்.. அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வழியை கண்டார்கள்.. ஆனால் அவர்கள் அதை மரணமில்லா வாழ்வு என்று கூறவில்லை, சதாசிவமான கோடி யுகம் வரை இருக்கலாம் என்றார்கள்.., பூமி இருக்கும் வரை என்றார்கள்.. எந்த பூகம்பத்தில் எந்த சுனாமியில் எந்த சித்தர் இறந்தாரோ அது எவனுக்கும் தெரியாது.. இல்லை நான் இறக்காமல் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு எந்த சித்தரும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வந்ததாக வரலாறும் கிடையாது..

கடவுள் வேறு, நம்பிக்கை வேறு..

நாம் முன்னமே கூறியது போல அகத்தியர் தெற்கு வந்து சரி செய்ததுவும் காரணக் கதையே.. திருமுறைகள் என்று உருவகப்படுத்தியதுவும் அன்றைய அரசியல் கதையே..

சமயம் என்பது பட்டியில் மாடுகளை வைத்து பால் கரப்பது போன்றது..

இது எல்லா மதங்களுக்கும் சமயங்களுக்கும் பொதுவான ஒன்று.. தவறாக சைவத்தை இழிவு படுத்துவதாக நினைத்தால் உங்கள் அறியாமை இன்னும் விலகவில்லை என்று அர்த்தம்.

இது ஒரு நாளில் எழுதி முடிக்க இயலாத விடயம் ஆனால் முடிவு என்பது நிலையானது அது இதற்கும் உண்டு.. அடுத்த பதிவில் இதை முடிப்போம்..

இவ்வளவு பேசுபவர் ஏன் இறைவனை வழிபடிகிறார் என்று கேட்டால் அதுவும் உங்கள் அறியாமையே.., நமக்கும் நம்பிக்கை உண்டு.. ஆனால் அது வேறு என்ற தெளிவும் உண்டு.

எனது முதல் நம்பிக்கை எனது தாயார் அதன் பின்னரே…, அனைத்தும்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.