ஆதியிலே பூரணமாய் நின்றவாமி

வணக்கம் தோழர்களே,

இன்று ஆங்கிலேய புத்தாண்டை கொண்டாடும் தமிழ்ர்களுக்கு எமது வாழ்த்துக்கள், இப்படி செய்வதானால் நாம் ஆங்கிலேயர் நமது நாடுகளை ஆட்சி செய்யும் போது அவர்களை விரட்டியிருக்க தேவையில்லை.

சரி நமக்கு எதற்கு அரசியல்….! அதற்கும் நமக்கும் வெகுதூரம்…

இன்று நாம் சக்தியின் திருவிளையாடல் பற்றி சிறிது பார்க்களாம்..

” பெண்ணான நீலியடா ஐவருக்கும்
பெருமையுள்ள சக்தியடா பேதைபேதை
கண்ணான நடுமதியும் விண்ணுக்குள்ளே
கற்பூர தீபமெனக் கலந்தாளாத்தாள்
பண்ணான மதியமுத பாலையுண்டு
பதும்மல ருச்சியின்மே லிருந்துகொண்டு
விண்ணான விண்ணிலொரு நடனஞ்செய்தே
வேதாந்த சக்தியென விளங்குவாளே. “

எவ்வளவு தெளிவான பாடல் பார்த்தீர்களா..! மிக அருமை.

“ வரிசையுள்ள பூரணியே தெய்வந்தெய்வம்
வாமியடா அவளுடைய மார்க்கங்கேளு
உரிசையென நம்புவோர்க்கு உலகமாதா
ஓங்காரங் கொண்டவர்க்கு சிகாரமானாள்
பரிசுடைய பார்வதிப்பெண் நானேயென்பாள்
பகரறியார் பொருளுடைய பசுமைக்காரி
அரிதான அட்டாங்க யோகத்துக்கு
அவள்திறமை யல்லாமல் வேரொன்றில்லை. “

” வேரான சோதியடா வேரைக்கண்டு
வெகுகோடி சித்தர்தவஞ் செய்தாரப்பா
மாறாத பேரொளியே சொர்க்கம்சொர்க்கம்
மதியான பூரணமே சித்தியானால்
கூறாத கற்பமடா குகரிக்கற்பம்
கூரறிந்து கொண்டவனே சித்தன்சித்தன்
நேராக நின்றவனே அருளைக்கான்பான்
நின்றநிலை தப்பவிட்டால் ஒன்றுமில்லை.”

“ ஆதியிலே பூரணமாய் நின்றவாமி
ஐவருக்கும் தானான அருமைபிள்ளை
நீதியிலே கொடுமையடா துடுக்குநின்ற
நிலைகாணா ரிதுரூபா ரூபாரூபம்
சோதியிலே நின்றுகொண்டு பார்க்கும்போது
துலங்குமடா தாயினுட மகிமைதானும்
சாதியிலே மிச்சமடா யேகரூபி
சமையுமுன்னே அவுசாரி யாடினாளே.”

இது சக்தியின் விளையாட்டை தெளிவாக கூறும் பாடல்கள். இவள் எப்படி சோதியில் இருப்பாள் என்று பார்க்களாம்.

பரிசோதனைக் குழாயில் அவளை பிடித்து அவள் அவுசாரி எப்படி ஆகிறால் என்பதை ” சோதியிலே நின்றுகொண்டு பார்க்கும்போது” ஒளிக்கற்றையை பரிசோதனைக்குழாயினும் குவியச்செய்த்தால் காணலாம்.

” நாதம் அது அறிந்தால் விந்தது வேறில்லை” என்பது இங்கு மிக தெளிவாக பார்க்கமுடியும்.

நஞ்சுண்ட கண்டன் பச்சை கிளியுடன் எப்படி சேர்ந்திருக்கிறான் என்று காணலாம்.

” ” வேரான சோதியடா வேரைக்கண்டு
வெகுகோடி சித்தர்தவஞ் செய்தாரப்பா
மாறாத பேரொளியே சொர்க்கம்சொர்க்கம் “ ”

இங்கு பேரொளியை நீங்களும் பார்த்து அவள் ஆசியை பெருங்கள். எத்தனை காலம் தான் அவளை புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் பார்ப்பது..!

” பகரறியார் பொருளுடைய பசுமைக்காரி “

பசுமைக்காரி எப்படி இருக்கிறாள்..,

” கற்பூர தீபமெனக் கலந்தாளாத்தாள் “

இப்படி பல பலவாக அவளை காணமுடியும்.

“ குமரியவள் ஐவருக்கும் குருவாய் நின்று
குருவான குண்டலினியே நான் தான் என்பாள் “

குண்டலினியை முதுகில் தேடும் தோழர்களுக்கு நாம் பரிசோதனை குழாயில் காட்டியிருக்கிறோம்.

”பரதேசி யென்று பகுத்தறி மந்திரம்
குருதேசியான குண்டலினி சத்தியாம்”

” பிண்டமே சக்தி பிரணவ ரூபமாம்
அண்டமே விந்து ஆதி நிராமயம்
விண்டிப் போக வேதம் பிறந்திடம்
கண்டவரில்லை கற்பத்தின் சாரமே “

கொண்டையில் குடுமியும், தலைப்பாகையும் கழுத்தில் கொட்டையும் ஆபரணங்களும் தரித்துக் கொண்டு மேடைபோட்டு, பக்த கோடிகளே என்று பேசும் எந்த சாமியாரையாவது காட்டச் சொல்லுங்கள் இந்த சக்தியையும் சிவனையும்.

ஆறு அடி உயர சிவலிங்கம் செய்து வைத்துக் கொண்டு நெருப்பு மூட்டி ஓமம் செய்வது பூசை அல்ல., அதை செய்வதற்கு முன் அக்கினியை கையில் எடுத்து தீர்த்தமாக குடிக்க தெரியவேண்டும்.

காற்றை பிடி என்றால் மூக்கைப் பிடிக்கும் அறிவு சீவிகளே, உங்கள் குருமார்கள் ஏமாற்றும் தகுதியானவர்கள், நீங்கள் ஏமாறும் சக்திபடைத்தவர்கள்..

கடவுள் என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு….

வேதாந்தம் பேசிக் கொண்டு ஊரையும் நாட்டையும் ஏமாற்றும் இந்த ஆசாமிகளை கட்டிவைத்து அடிக்க வேண்டும்.

எமது பங்கை நாம் செய்கிறோம்.., உங்கள் பங்கு எது என நீங்கள் சிந்தியுங்கள்..

மீண்டும், தமிழனாக பிறந்து ஆங்கிலேய புத்தாண்டை குடியும் குடித்தனமுகாக கொண்டாடும் ஆசாமிகளுக்கும் தோழர்களுக்கும் இந்த பதிவு..

” நாயிற் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவமே,

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே…”

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்…… மட்டுமே.. ….செல்லுவார் சிவபுரத்தில்…..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்