நரசிங்க வழிபாடு… வினைகள் நீங்கட்டும்.

வணக்கம் தோழர்களே மாணவர்களே,

இன்று நமது நடைமுறை ஆண்டு 2014 கின் இருதி நாள், உங்களைப் பிடித்த பேய்கள் விலகவும், உங்கள் வீடுகளில் இருக்கும் துன்பங்கள் அகலவும், கடன் தொல்லைகள் நீங்கி புதிய வாழ்க்கை மகிழ்சியாக இருக்க எமது சான்றோர்கள் தந்த ஓர் அறியவகை மந்திரப் பதிவை உங்களுக்கு பகிர்கிறேன்.

குறிப்பு.. இதையும் பிரதி பன்னி உங்கள் பெயர்களை இணைத்து வேறு தளங்களில் பதியாது இதன் பலனை மட்டும் பெற முயற்சி செய்யுங்கள். வீனாக பாவக்கணக்கை ஆரம்பிக்காதீர்கள்.

இது காக்கும் கடவுள் எனும் மகா விட்னு அவதாரமாக கருதும் இரணிய சங்ஙாரம் செய்த மகா வீர நரசிங்கத்தின் மந்திரம்.

மிக ஆபத்தானதும் வீரியமானதுமாக மாந்திரீக வம்சத்தில் கருதப்படும் மந்திர வரிசையில் இதுவும் ஒன்று.

மும்மூர்த்திகளின் அம்சத்தை கொண்டு ஓர் அவதாரமாக கருதப்படும் இந்த சக்தி பிரளைய காலத்தை ஏற்படுத்தியது என்பது சான்றோர்கள் குறிப்பு.

சிங்காசனத்தில் இருக்கும் சக்தியின் அம்சத்தை தலையாக கொண்டும், மும்மூர்த்திகளை உடலாக கொண்டும் இந்த சக்தி பிறந்ததாக இந்த சக்தியை கூறுவர்.

இரணியனை சங்ஙரித்த இரத்த வெறியினால் பிரளையத்தை உண்டு செய்ததாகவும், அதை தடுக்க சிவனார் புறப்பட்டு அவரும் அந்த இரத்த வெறியில் இருக்க பின் தேவி இவர்களை தனித்ததாக கூறுவர். இப்படி பல இரகசியங்கள் கொண்டது இந்த நரசிங்க வழிபாடு. அதை பற்றி பின்னர் பார்க்களாம்.

இந்த மந்திரத்தை முறையாக சித்தி செய்தவர்கள் எந்த ஏவலுக்கும் அஞ்சத் தேவையில்லை என்பார்கள் சான்றோர்கள். இதை நீங்கள் முறைப்படி சித்தி செய்தால் வெற்றி நிச்சயம்.

சித்தி செய்வது என்றால் கசடற ஞாபகம் செய்து வைப்பது மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை.

மந்திரம்.

ஓம் மகா வீர நரசிங்க ரூபாயா வீசு வீசு ஓம் அங் அங் அறு அறு உங்ங உங்ங உற உற ஆதித்திராயா நம, சிங்ங அக்கினி அறு  நம, சிவாய அக்கினி அறு நம, சிவலிங்க அக்கினி அறு நம, சிவாய நரசிங்கா சர்வ வினையும் அறு அறு சிவாகா…

குறிப்பு. மந்திரத்தை முறையாக சொல்ல வேண்டும், “ ,” ( கமா) இட்டிருக்கும் இடங்களை நிறுத்தி சொல்ல பழகுங்கள்.

கிரிகை….

முடி சீவிய தேங்காய் எடுத்து அதின் மேல் சூடம் ஏத்தி இந்த மந்திரத்தை 7 முறை சத்தமாக கூறி உங்கள் வீட்டு வாசல்படியில் அடித்து உடைத்து விடுங்கள். திதறு தேங்காய் அடிப்பது அல்ல, இரண்டாக உடையக்கூடியதாக உடைக்க வேண்டும். அல்லது குறித்த நபருக்கு செய்வதானால் தேங்காயை அவரின் தலையை சுற்றி பின்னர் அவரின் முகத்துக்கு எதிராக வைத்து வெட்டலாம்.

தேங்காய் சுத்தமாக இருக்க வேண்டும், மஞ்சல் குங்குமம் நன்காக பூசவேண்டும்.

எப்படிப்பட்ட வினையையும் எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை செய்த பின்னர் உங்கள் வீட்டுக்கு மஞ்சல் நீர் தெளித்து பின்னர் சாம்பிரானி தூபம் போட்டு உங்கள் வீட்டு வழிபாட்டை செய்யுங்கள்.
இதை செய்ய வேண்டிய சரியான நேரம்.. மாலை 5.30 – 6.30 இடையில் மட்டுமே..

வெற்றிகள் கிடைக்கட்டும். மேலும் உங்கள் கஷ்டங்க நீங்கி புதிய வாழ்க்கை அமையட்டும்.

அனைவரும் இதை பகிருங்கள்., ஏனைய அன்பர்களும் இந்த ஆண்டில் இருந்த கஷ்டங்கள் போக்கி, வாழ்கை மகிழ்சியாக அமைய முயற்சி செய்யட்டும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்