வாதம் 80க்கும் கெந்தி தாளக குளிகை

வணக்கம் தோழர்களே,

இதோ ஓர் அற்புதமான பதிவை உங்களுடன் பகிர்கிறேன். வாத ரோகம் ஓர் கொடிய நோய்தான் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக தெரிந்த உண்மைதான். சாதாரன கை கால் வலியில் ஆரம்பித்து பின்னர் அது ஆளை முடக்கிப் போடும் அளவுக்கு கொடிய ரோகமாக மாறும் தன்மை கொண்டது.

Ulli_1 Ulli_3

 

 

 

 

நீண்ட நாட்களுக்கு பின் இந்த குளிகையை செய்ய அவசியம் ஏற்பட்டதன் காரணமாக இந்த பதிவு உங்களுக்கு பார்வைக்கு கிடைக்கிறது.

எமது பாரம்பரிய முறைகளில் ஒன்றான இந்த கெந்தி தாளக குளிகை 80 விதமான வாத ரோகங்களுக்கும் ஓர் நல்ல குளிகையாக அமைகிறது. உடலிள் இருக்கும் நீர் கெட்டு அது உடல் நரம்புகளை பின்னி இந்த ரோகம் ஏற்படுகிறது. இந்த குளிகை உடலிள் இருக்கும் கெட்டுப் போன நீரை நீக்கி, அது பற்றிய நரம்புகளை மீண்டும் தூய்மைப்படுத்தி செயலாற்றவைக்கிறது.

Ulli_4 Ulli_5

 

 

 

 

பக்கவாதம் ஏற்பட்ட சிலரை நாம் இந்த குளிகையின் துணைகொண்டு மீண்டும் நடமாட வைத்த பெருமையை எமக்கு தந்த குளிகை இது என்றால் மிகையாகாது.

முறையாக புடமிடப்பட்டு தூய்மைசெய்யப்பட்ட மூலிகைகளுடன் பாஷாணங்கள் சில சேர்ந்து இது மிக சிறப்பான குளிகையாக அமைகிறது.

இந்த குளிகை ஒருவருட ஆயுள் மட்டுமே உடையது என்பதால் அதிக அளவில் இதை செய்து வைப்பது முடியாது, தேவைப்படும் போது இதை செய்து பயன்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கும்.

இதை செய்வதற்கு குறைந்த பட்சம் 6 நாட்கள் தேவை, பாஷாணங்கள் சுத்தி செய்வது முதல் புடம் போட்டு எடுப்பது தொடக்கம், குளிகை 4 சாமம் தொடர்சியான அறைப்பு தேவை. ஆதாவது 12 மணி நேரம் கல்வத்தில் அறைக்கவேண்டும்.

Ulli_6

பின்னர் தூதுளங்காய் ஆளவு உருண்டை செய்து உலர்த்தி எடுத்து பின்னர் சிறு தீயில் புடம் மண் சட்டியில் இட்டு புடம் இடவேண்டும்.

செயற்பாட்டை பார்த்தால் புரிகிறது அல்லவா இதன் தன்மை எப்படி இருக்கும் என்று. இன்று காலையில் கல்வத்துக்கு மருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, நாளை குளிகைகளாக மாறும்.

அதன் படங்கள் இங்கு சில காட்சியாகிறது.. மேலும் நாளை இதன் தொடர்சிகள் வரும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்