பதிணென் கோளைக்கும் பொதுவான மெழுகு

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏற்படும் கோளைக்கு (சளி) மிக இலகுவான சிறந்த மெழுகு இது. உள்ளி குளிகை செய்து காட்டுங்கள் என்று பதிவிட்டிருந்தேன் ஆனால் இதுவரை யாரும் அதை செய்ததாக தெரியவில்லை.

med_2

எமது மக்கள் சோம்பேரிகள் என்று தெளிவாக தெரிந்த காரணத்தால் தான் தணியார் மருந்தாக்கள் நிறுவனங்கள் கண்டதையும் தயார் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அனைத்தும் இலகுவாக கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்னம் கொண்ட சமூகம் இது.  இணையத்தளங்களில் வெளியாகும் மருத்துவக் குறிப்புக்கள் ஏறாலம், அவை எங்கிருந்து வருகிறது என்று சிந்திப்பதே இல்லை.

med_3

எது எப்படியோ…, தகவல்களை உங்களுக்கு பகிர்வதன் மூலம் எமது சேவையை நாம் நிறைவேற்றுகிறோம், அதன் மூலம் பலனடைய விரும்புவபர்கள் பலனடையுங்கள்..

இங்கு இதற்கான சரக்குகள் மற்றும் செய்முறைகள் விளக்கமாக காட்டப்பட்டுள்ளது.

med_4

சரக்குகள்

கருஞ்சீரகம், சீரகம், திப்பிலி இவை 3 கழஞ்சி அல்லது 15 கிராம். பூண்டு இரண்டு பலம் அல்லது 70 கிராம். மற்றும் 15 கிராம் வீதம் சுத்தமான நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய். அத்துடன் தனியாக எடுத்த தேய்ங்காய்ப்பால்.

சரக்குகள் மூன்றும் உள்ளியும் சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு மெழுகாக அறைக்கவும், பின்னர் எண்ணெய்களை விட்டு மெழுகாக சிறுதீயில் குழப்பி எடுக்கவும்.

 

காலை மாலை 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிடவும் 18வகையான கோளைகள் அகலும்.

முயற்சி செய்பவர்கள் உங்கள் செயற்பாட்டை போட்டோ எடுத்து உங்கள் முகநூலில் பதியுங்கள்.

med_5

med_6

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்.