எட்டாப்பழம் புளிக்கும்…. ஏன்..!

வணக்கம் தோழர்களே, மாணவர்களே…,

இன்று ஓர் அற்புதமான ஓர் பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக மகிழ்சி..,  இரசவாதம் மற்றும் காயகற்பங்கள் பற்றிய கற்றலை எம்மிடம் தொடரும் மாணவர் திரு ஜெயகுமார் பிள்ளை அவர்களின் அடுத்த வெற்றி இது.

ஓர் சிறப்பான குருகுல மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், சித்தர் இலக்கியம் சித்தர் வாகடம் கூறும் ஒவ்வொறு உண்மையையும் தொடர்சியாக ஆராய்ந்து அதன் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இவர் ஓர் சிறந்த உதாரணமாகும்.

சித்தர்கள் இரகசியம் மேடை போட்டு பேசுவதும் இல்லை, ஆயிரக்கணக்கில் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு கும்மாலம் போடுவதும் இல்லை, வாயாலும் மூக்காலும் காற்றை பிடித்துக் கொண்டு கையும் காலும் தொங்கவிட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு மணிமாலைகளை உருட்டியபடி வாய்க்குள் முனுமுனுக்கும் வித்தைகளும் இது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.,

சித்தர்கள் விஞ்ஞானிகள் என்று கூறினால் போதாது அவர்கள் வழி வந்தோம் என்றால் போதாது, இமயமலையில் ஞானம் கிடைத்தது என்றால் போதாது, குடுமியும் தாடியும் வளர்த்தால் போதாது, காவியும் மாலையும் இருந்தால் போதாது, ஆச்சிரமம் கட்டிக் கொண்டு பெண்களை சேர்ந்தால் போதாது, சிவலிங்கத்தை பெரிதாக பிரதிட்டை செய்து கொண்டு பூசை செய்தால் போதாது, பாம்புகளை பிடித்தால் போதாது, தத்துவங்கள் இணையத்தில் பேசினால் போதாது, தலைப் பாகை கட்டிக் கொண்டு பேட்டி கொடுத்தால் போதாது, யோகா என்ற பேரில் கவட்டுக்குள் கால்களை மடித்தால் போதாது, நெருப்பு சக்தி என்றால் போதாது, நீர் சக்தி என்றால் போதாது, இப்படி இன்னும் பல போதாத விடயங்கள் இருக்க சித்தர்கள் கூறியது போல் ஆய்வுகள் செய்ய வேண்டும், அவை சித்தர்கள் கூறியது போல் செயற்படுகிறதா என பார்க்க வேண்டும், அவர்கள் வழி செல்ல வேண்டும்..,

பஞ்ச பூத சக்தி என்று கூவிக் கொண்டு இங்கு திறியும் பல அற்பப் பதர்கள் அதிகமாகிவிட்ட காரணத்தால் உண்மைகள் இல்லையென்று மாறுவதில்லை.., மேடைகள் போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் சிறு பிள்ளை புத்திக்கும், ஆழ் கடலில் இருக்கும் ஆமை எப்போது முட்டை இடும் என்று ஆராய்ந்து கூறிய சித்தர்களுக்கும் இடையில் எந்த அளவு வேற்றுமை இருக்கிறது என்று என்னிப் பாருங்கள்..

சித்தர்கள் பேரில் இன்று இருக்கும் ஓர் மோகத்தின் காரணமாக மக்களை மிக இலகுவாக இந்த சாமியார் வேடம் போட்டு பலரும் ஏமாற்றுகிறார்கள், இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதலில் சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முழு அறிவும் தெளிவும் வேண்டும்.., கடவுளை காண்பதற்கு முன் உங்கள் அறியாமையை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்..

நாம் இதுவரை பல மாணவர்களை கற்பித்திருக்கிறோம், ஆனால் அவர்கள் பலரும் எம்மிடம் கேட்டது மாந்திரீக பயிர்சிகள் தான், காரணம் அதில் வருமானம் சிறப்பாக இருக்கும் என்ற தெளிவு அவர்களுக்கு உண்டு., ஆனால் இந்த பிறப்பின் நோக்கம் அதுவல்ல என்ற சிந்தனை அவர்களுக்கு போதுமானதாக இல்லை., இருக்கும் வரை சிறப்பாக (பண வசதிகளுடன்) இருந்துவிட்டு போவோம் என்பது அவர்களின் சிந்தனையாக இருக்கலாம். என்ன செய்வது மாயையை விலக்கி உண்மையை அறியவும் ஓர் பக்குவ நிலையும் தெளிவான சிந்தனையும் தேவைப்படுகிறது. மேலும் கூறினால் அதுக்கும் இறைவனின் நாட்டம் வேண்டி இருக்கிறது.,

” பேய்பிடித்து சாஸ்திரத்தை உலகத்தோர்கள்
பேணியே படித்திடுவார் பொருளைக்காணார்
வாய்புழுத்த நாய்போலே உலகத்துள்ளே
நோய்பிடித்த சித்தர்கள்தான் அனேகமுண்டு”

” ” தொட்டல்லோ காட்டாத வித்தைபாரிற்
தொட்டெண்ணிப் போட்டாலும் வராதுவித்தை
விட்டல்லோ தன்னாலே யாகுமென்று
மேதினியில் இறந்தவரே கோடாகோடி
கெட்டல்லோ ஆண்மையினால் மாயைமூடி
கெருவமெனு மாங்கார யிடும்பினாலே
பட்டல்லோ கூத்தனுட வலையில்சிக்கி
பதைபதைத்தாற் கேதுகுருபாதம் போற்றே””

ஓர் குருவாக இருந்தால் அவனிடம் கற்பவன் நாளை குருவாக வேண்டும், ஆனால் இங்கு ஆச்சிரமங்கள் சாமியார் மடங்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது பல சாமியார்கள் இறந்தபின்னும் அந்த ஆச்சிரமங்கள் இயங்குகின்றன காரணம் அங்கு எப்போதும் குரு இருந்ததில்லை, ஆகவே மீண்டும் ஓர் குரு எதற்கு என்ற தெளிவான சிந்தனை அதை தாபித்து நடாத்தும் ஆசாமிகளுக்கு நன்கே தெரியும். இந்த படித்த முட்டாள்கள் என்ற உயர் அரச அதிகாரிகளும், வியாபார காந்தங்களும் அங்கு செல்வது ஏன் என்று தெரியாமல் எமது மக்கள் கூட்டம் அங்கு அலை மோதுகிறது.

சிந்தித்து பார்த்தால் சாமியார்கள் முட்டள்கள் இல்லை, அவர்களிடம் போகும் நீங்கள் தான் முட்டாள்கள்.,

சித்தர்கள் பற்றிய தெளிவு எமது மாணவருக்கும் சற்று வேறாகவே முன்னர் இருந்தது, ஆனால் படிபடியாக அவருக்கு கற்பிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவரது 25 வருட ஆன்மீக அறிவும் மாந்திரீக ஆற்றலும் அவருக்கு கொடுத்திருந்த பதில்கள் முழுமையடையாமல் இருந்த காரணத்தால் இந்த உண்மைகள் பற்றிய ஆய்வை ஆரம்பித்தார் அதில் இன்று வெற்றிகளும் பெற ஆரம்பித்திருக்கிறார்.

நாளை வரும் சமூகத்துக்கு அவரும் ஓர் சிறந்த சித்தர்கள் பற்றிய குறிப்பையும் வேதியல் உண்மைகளையும் தொகுக்கும் ஆற்றல் பெருவார் இதுவே குருகுல கல்வியின் சிறப்பு. இதில் அதிகம் ஆச்சர்யம் கூடிய விடயம் இதுவரை அவர் எம்மை கண்டது இல்லை, நாமும் அவரை சந்தித்ததும் இல்லை. இணையத்தின் மூலமே அவர் இந்த கற்றலை இதுவரை சிறப்பாக செய்திருக்கிறார்.., நாம் கூறும் விடயங்கள் அவருக்கு இயற்கை இலகுபடுத்தி கான்பிக்கிறது அதன் மூலம் அவரின் தேடல்கள் சிறப்பான முடிவுகளை கொடுக்கிறது.

உண்மையைச் சொன்னால் அவருக்கு எம்மிடம் கற்க ஆரம்பிக்கும் போது திரிபலாதி என்றால் எதன் கூட்டுகள் என்று கூடத் தெரியாது.. ஆனால் இன்று காயகற்பம் முதம் அகார உகார மகாரம் வரை தெளிவாக தெறிந்திருக்கிறார், கற்ப மருந்துக செய்கிறார் இரசவாதத்தின் படிக்கட்டுகள் முன்னே இருப்பது கண்டுவிட்டார்.., இவை எதுவும் அவர் யாருக்காகவும் செய்யவில்லை, தனது அறியாமையை போக்கவே செய்கிறார்.

எம்மிடம் மாணவராக சேர்வதற்கு வேண்டுகோள் விடுக்கும் பலரை பார்த்து சலித்துவிட்டது. இந்த உபாசனை எப்படி செய்வது அந்த மந்திரம் எப்படி சொல்வது, குல தெய்வத்தை எப்படி வணங்குவது என்று பல கேள்விகள், சிலர் மட்டுமே மருத்துவம் கற்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஓர் சிறிய பயிற்சி கொடுத்தால் இரண்டு மாதம் தேவைப்படும் போல் அதை செய்வதற்கு பின்னர் எப்படி இது சாத்தியம்.

ஜெயகுமார் பிள்ளை இரண்டு குழந்தைகளுக்கு தந்தை மணைவியும் குழந்தைகளும் என வெளினாட்டில் வசிப்பவர், மதிப்பு மிக்க ஓர் தனியார் நிருவனத்தில் நல்ல பதவியில் இருப்பவர் செய்யும் தொழிலை கடவுளாக மதிப்பவர், இவருக்கான தேடல்களின் நேரம் உங்கள் பலரை விடவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் அவரின் தன்னம்பிக்கையும் உண்மையை காணவேண்டும் என்ற ஆற்றலும் அவரை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்கின்றன..,

ஓரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர் எமது மாணவராக இருப்பது எமக்கு மிக பெருமையே..,

சரி விடயத்துக்கு வருவோம்.. இதோ இங்கு காட்டப்படுவது தான் ஏரழிஞ்சில் என்ற பஞ்சபூதங்களை தன்னகத்தே கொண்ட உயிர் தாவரம். இதை அவர் வெளினாட்டில் கண்டுபிடித்திருக்கிறார் என்றால் அவரின் தேடல் எப்படியானது என்று பாருங்கள்.. இதற்கும் எட்டாப்பழம் புளிக்கும் என்ற தலைப்புக்கும் என்னடா சம்பந்தம் என்று சிந்திக்கும் பலருக்காகவும்..

012

இதன் பழங்கள் மிக புளிப்புச் சுவை கொண்டவை இதை சாப்பிடும் மனிதர்களும் உண்டு… ஆனால் இதன் மகிமை மிகப் பெரியது. எட்டாது என்றால் கிடைப்பதற்கு அறிதானது என்று பொருள், கிடைப்பதற்கு அறிதான இந்தப்பழம் புளிக்கும் தண்மை கொண்டது என்பதால் இதை சான்றோர் கூறும் போது.., எட்டாப்பழம் புளிக்கும் என்று உவமையுடன் கூறினார்கள், காரணம் இது மிக சக்தியான ஓர் பழமாக இதை கருதினார்கள் சான்றோர்கள்.

இரசவாதமாகட்டும், காயகற்பமாகட்டும் இதன் பயன்பாடு மிக அவசியமானதாக கூறப்படுவதன் காரணத்தால் இதை அவர்கள் பல பரிபாசைகளில் மறைத்தார்கள்..

பஞ்சபூதங்களை தன்னகத்தே கொண்ட ஓர் தாவரம் என்றால் கேட்கவா வேண்டும் இதை. இப்படி பல விடயங்கள் இந்த சித்தர்கள் பாடல்களில் புதைந்து கிடப்பது ஒருபுரம் இருக்க, இதை அறியாமல் மேடை போட்டு பேசும் இந்த அற்பர்கள் என்ன செய்வது..

ஏரழிஞ்சில் கிடைத்தால் போதாது அதை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்ற தெளிவு இல்லாமல் ஒன்றும் சாதிக்கவும் முடியாது.

0121

இது மாணவர்களாக எங்களையும் சேர்கவும் என்று கூறும் அனைவருக்கும் சுட்டிக் காட்டுவதற்கான பதியப்படுவது, ஒருவரின் மனதையும் துன்பமடையச் செய்வது எமது நோக்கமும் அல்ல, மீறி நீங்கள் துன்பப்பட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்யவும் முடியாது.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்