உள்ளிக் குளிகை. மருத்துவக் குறிப்பு..,

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

எம்மிடம் மாணவராக சேர்ந்து மருத்துவம் கற்க வேண்டும் என்ற விருப்பமுடைய எவரும் இந்த பயிற்சியில் ஈடுபடலாம். இங்கே நாம் தருவது ஓர் இலகுவான பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்பு. ஓர் குளிகை, இதை குறித்த முறையில் படித்து சரிவர செய்து காட்டுபவர்கள் எமது மருத்துவ துறையின் ஆய்வியல் மாணவராக ஏற்கப்பட்டு தொடர்சியான மருந்துகள் செய்யும் முறைகள் கற்பிக்கப்படும்.

DSC01711

அதாவது குறிப்பில் இருக்கும் விடயங்கள் பிரித்து சரியாக அட்டவனை செய்ய வேண்டும்.

குறித்த சரக்குகள் வாங்கி அவற்றின் படங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

சரக்குவகைகள் சில கண்டிப்பான சுத்திகள் தேவை, அவற்றை இணங்கண்டு சுத்தி செய்யவேண்டும்.

பின்னர் அவை குறித்த முறையில் குளிகையாக தயாராகவேண்டும்.

இத்தனை செயற்பாடுகளும் எமக்கு ஒலி ஒளி காட்சிக்கள், புகைப்படங்கள் என சாட்சியாக தரப்பட வேண்டும்.

உங்கள் முயற்சி சரியானதாகவும் உண்மையானதாகவும் இருப்பின் நீங்களும் இந்த பயனத்தில் தோடரலாம்.

இந்த அடிப்படை விடயங்கள் சில கற்ற பின்னர் கற்ப மருந்துகள் பற்றி கற்கும் தகுதியிருந்தால் பார்க்களாம்.

சந்தேகங்கள் இருப்பின் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்