மகா மேரு எனும் மறை பொருள்…

வணக்கம் தோழர்களே,

இந்த மகா மேரு அல்லது ஸ்ரீ சக்கரம் என்ற ஒன்று மிக விசேடமாக பேசப்படுகிறது..! என்னதான் இருக்கு அந்த கூம்பில்..!

மேரு என்றால் மலை, துருவங்களில் இருக்கும் மலைகள்.., அதுவும் குறிப்பாக வடதுருவத்தை குறிக்கும் மலை என்பது சமய ரீதியான பொருள். அதாவது குறிப்பாக சொன்னால் பொன்மலை என்று கருதும் கயிலாயம் என்ற இமயத்தை குறிப்பதாகவே இச் சொல் வந்தது. மற்றும் மேரு என்றால் ஆசனபீடம் என்ற கருத்தும் பிற்காலத்தில் இலக்கியங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

sri_chakra400

இதற்கிடையில் இந்த மேரு என்ற ஒன்று, இன்று சமய பொக்கிசமாக மாறிவிட்டது எப்படி… ! கேட்டால் ஆதி சங்கரர் இதை உருவாக்கினார் என்ற விளக்கம் வருகிறது. மேலும் பல விஞ்ஞான சான்றுகள் தரப்படுகிறது.

சங்கரர் வருவதற்கு முன்னர் பல யுகங்கள் கடந்து நமது பாரம்பரியம் இருக்கிறது, அதில் இந்த மேரு எப்படியான இடத்தை பெற்றிருக்கிறது என்றால் தெரியாது..!

எங்காவது எதாவது சிக்கினால் அதை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடும் கூட்டத்தின் செயற்திட்டங்கள் இங்கு புரிவதில்லை எமது மக்களுக்கு.. அது தான் எமது சமயங்களின் அனுதாப நிலை இன்று..

மேரு என்பது மிக சக்தியான ஓர் விடயமாக இருந்தால் அதை ஆதி சங்கரர் என்பவர் செய்திருந்தால், அதுவே இங்கு பலரும் கூறுவது போல் சக்தியின் பீடம் என்றால் ஏன் அதை உங்கள் ஆதி சங்கரர் ஒரு ஆலயத்தில் கருவரையின் மூல விக்கிரகமாக பிரதிட்டை செய்யவில்லை.. !, (கருவரை அடியில் அட்சரவடிவில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கு என்று கூற வேண்டாம், அடியில் என்ன இருக்கிறது என்பது இரகசியம்.. அதை கண்டவர்கள் யார் என்ற கேள்வியும், அப்படி அடியில் பிரதிட்டை செய்ததை ஏன் மேலும் வைத்திருக்கலாமே என்ற கேள்வியும் உண்டு.) அவருக்கு பின் வந்தவர்களாவது அதை மூல விக்கிரகமாக பிரதிட்டை செய்து ஆலயம் ஒன்றை முறையான ஆகம வழிக்கு எடுத்துக் காட்டியிருக்கலாமே..!

பல ஆண்டுகள் முன்னால் ஸ்ரீ சக்கரம் என்ற பேரில் அது இயந்திர (அட்சரம்) வடிவில் பிரிண்டாகி வந்தது, பின்னர் அதன் அடுத்த வியாபார உத்தியாக கூம்பாகவே மாற்றம் பெற்றுவிட்டது.

இந்த மேரு என்ற வடிவத்தை நன்றாக உற்று நோக்கினால் அது ஆப்புச் சீவி வைத்திருப்பது போலவே தெரியும், ஆப்பில் எப்படி அம்பால் இருக்கிறாள், அல்லது அம்பாளுக்கே ஆப்புத்தான் இங்கு என்றது போல் தான் தெரிகிறது..

அதாவது கழுவு மரம் என்ற அமைப்பை போல் அது உள்ளது என்றேன்,,..!

மேரு என்பது எதுவாக கூறப்பட்டது என்ற உற்று நோக்குதல் இருந்தால் சில உண்மைகள் புரிய வாய்ப்புக்கள் உண்டு. ஆதியில் பொன்னம்பலத்தானை மேரு கிரி என்றார்கள் சான்றோர்கள்.

அவனின் சடாமுடியும் வடக்கே குவிந்து நின்ற மலையும் ஒன்றாக அவர்களுக்கு தென்பட்டதன் காரணமாக அதை அவர்கள் மேரு மலை என்றார்கள். அதாவது அவன் இருக்கும் மலையாக அதை உருவகப்படுத்தினார்கள். அதனாலேயே அது கயிலாயம் என்றும் கூறப்பட்டது.

அவனைவிட பெரியதாக எதுவும் இருக்க முடியாது என்ற ஆழ்ந்த சிந்தனை அவர்களிடம் இருந்தது அப்படியே இந்த மலையை விடவும் பெரிய மலை எங்கேயும் இருக்கவும் முடியாது என்ற அடிப்படையில் அது மகா மேரு என வட திசையில் இருக்கும் மலையை குறித்தார்கள்.

இதில் மேரு என்பது முழுக்க சிவனை அடிப்படையாக கொண்டு எழுந்த ஓர் விடயம், இதில் எங்கிருந்து வந்தது இந்த சக்தியின் ஆசனபீடம்.

சிவலிங்கத்தை உற்று நோக்குங்கள், நீங்கள் மேரு என்று கூறும் கூம்பகம் அதன் வடிவில் அல்லவா இருக்கிறது.

இன்னும் சற்று ஆதி சங்கரன் விளையாட்டை கூறவேண்டுமானால், சக்தி வழிபாட்டில் இருந்த அனேக விடயங்களை மாற்றி அமைத்தவர் அவர் என்ற பேர் உண்டு. அதற்கு அவர் கையாண்ட உத்தி அது.. அதாவது சக்தி இருக்கும் இடங்களில் சிவத்தை பிரதிட்டை பன்ன வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட உத்தி அது..

சக்தியை வழிபடுபவனிடம் எப்படி அதை கூற முடியும். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்வது இலகுவான காரியமா என்ன.., அதனால் சிவனை ஆசன வடிவில் பிரதிட்டை செய்யலாம் என அவர் எடுத்த உத்தி அது.. அதற்கும் காரணமும் உண்டு…,

பிரமச்சரியம் அல்லது திருமணம் ஆகாதவன் அல்லது பெண்ணுடன் சேராதவன் முறையான சிவலிங்க பிரதிட்டை செய்யவும் அதை முறையாக வழிபடவும் (அதாவது அதை தொட்டுப் பார்க்கும் தகுதியும் இல்லை) முடியாது என்ற ஓர் நிலை இருப்பதால் இந்த சன்யாசம் அல்லது பிரமச்சரியம் பூண்ட தொண்டர்கள் என்ற சாமியார்கள் ஆதியில் சிவ வழிபாட்டுக்கு கையாண்ட வழிமுறைகளில் இந்த மேரு என்ற மறைபொருளும் ஒன்று.

சிவலிங்கம் என்பது சிவனும் சக்தியும் இரண்டற கலந்த படைப்பின் தத்துவம் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து இந்த காரணம் அமைகிறது. ஆதியில் அரசர்கள் மன்னர்கள் சிவ ஆலயங்களை கட்ட வேண்டிய தேவை வந்த காரணமும் இதுவே.., சித்தர்கள் சிவலிங்கங்களை பிரதிட்டை செய்ய காரணமும் அதுவே.., ஆனால் இன்று சாமியார்கள் சிவலிங்கம் பிரதிட்டை செய்து அதை வழிபடும் காட்சிகள் அமோகம்.., அதுவும் சரிதான் பெண்னை தொடாத சாமியார்கள் இல்லை என்பது இன்று ஒருபுரம் இருப்பதால் அது பரவாயில்லை.

மறைபொருளாக ஒரு விடயம் அன்று கையாளப்பட்டிருக்கிறது, அது ஏன் என்ற தேடுதல் இங்கு இல்லை, ஆனால் இதை இப்படி வழிபட்டால் வாழ்கையில் செல்வம் பெருகும் கடன் தொல்லை விலகும் என்றால் உடனே கூட்டம் கூட்டமாக ஆரம்பிக்க வேண்டியது.., இப்படியே போய் முட்டி மோதி பின்னர் சமய நம்பிக்கை அடியோடு கெட்டு மதமாற்றம் என்ற மாயையில் சிக்கி சீரழிவது.

மகா மேரு என்ற பேரில் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை, அடியும் முடியும் தேடிய கதையை விட இது கொடுமையான கதைதான்.., நீங்கள் மேரு என்று வழிபடுவது முழுமையான சிவலிங்கத்தை தான்.., அதில் எந்த மாற்றமும் இல்லை, சிவலிங்கத்தின் பீடத்தில் இருக்கும் அத்தனை தாமரை இதல்கள் கணக்கில் தான் மேரு சக்கரமும் அமைகிறது சிவலிங்கத்தின் லிங்க அமைப்பை அதன் சரியான உயரத்தை குவிப்பதற்காகவே அத்தனை முக்கோனங்கள் சேர்க்கப்படுகிறது., நடுவில் கூர்ந்து நிற்பது லிங்கப் புள்ளி என்பார்கள் சித்தர்கள். படைப்பின் துவாரம் என்ற பெயரும், பிரம்ம புள்ளி, மூன்றாவது கண், நெற்றிக்கண், மூலத்துவாரம், பிரபஞ்ச உற்பத்தி, என இன்னும் பல பெயர்களில் மறை பொருளாக கூறப்படுகிறது.

இதில் சக்தி மேருவாக அமர்வதில்லை, சிவத்தில் தாங்கும் சக்தியாகிய பீடமாக வீற்றிருப்பாள், அவளின் தூண்டுதல் காரணமாகவே இங்கு படைப்புக்கள் இடம்பெருவதாக கருத்தை கொண்டே அவள் சக்தியாக அதாவது படைப்பின் தூண்டுதல் சக்தியாக கருதப்பட்டு, அவள் கட்டி வைக்கப்படுகிறாள்.., அதனால் தான் நானும் கட்டியிருக்கிறோம் அவளை.., (பெண்ணை திருமணம் – கயிறு கட்டியிருக்கிறோம்) அடையாளம் அல்ல திருமணம், படைப்பின் பீடம் அது, அட்சரத்தின் ஆசனம் அது..,

இடப்பாகமாக ஏன் வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள் சக்தியை.., மேரு என்பது அவள் என்றாள் அவள் வடப்பக்கம் அல்லவா இருக்க வேண்டும்.., வடதிசை நோக்கி சிவ ஆலயங்கள் அமைக்கப்படும் ஆனால் சக்தியை கிழக்கு நோக்கி அல்லவா வைப்பது ஆகமம்..,

மடாதிபதிகள், ஆதீனங்கள் இன்று செய்யும் செயல்களை நம்பி ஏமாற வேண்டாம், அவர்களுக்கு தெரிந்தது, காவல் நிலையமும், சீ சீ டிவி கமராவும் தான்., எல் ஈ டி டிவியில் சினிமா பார்க்கும் ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் தான் இங்கு மிச்சி இருக்கிறது.., கேட்டால் தொழில்நுட்பம் தேவை சமயத்தை வளர்ப்பதற்கு என்கிறார்கள், நீ ஏன் சமயம் வளர்க்க வேண்டும்.., தேவையானால் அதை இறைவன் செய்யட்டும், நீ வழிபாட்டை செய்,.. ஒன்றும் வேண்டாம் என்று சென்றவர்கள் தானே சாமியார்கள் சன்யாசிகள்..! ஏன் உலக நாடுகளில் சொத்துக்களும் ஆச்சிரமங்களும்.., தென்னாடுடைய சிவன் தானே…, லண்டன் சிவன், கனடா சிவன் அல்லவே…, சிந்திக்க மாட்டீர்களா..,

மக்கள் உழைப்பு தேடி வெளினாடு செல்கிறார்கள், இறைவனை காணவேண்டுமானால் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து வழிபடுவார்கள்., மன அமைதி மக்களுக்கு வேண்டும் என்றால் அளவுடன் வாழ அவர்கள் பழக வேண்டும் அதை விடுத்து ஆன்மீகம் என்ற பேரில் அவர்கள் பணத்தை இவர்கள் சம்பாதிப்பது எவ்வளவு கேவலமானது.., இதற்கு உடைந்தையாக இருப்பது மக்களாகிய நீங்களே..,

எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” இது நாம் கூறும் கருத்தாக இருந்தாலும் சரி.. ஆராய்ந்து பார்க்க வேண்டும்., பகுத்தறிவு செய்து பார்க்க வேண்டும்.

ஒரு விடயம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க வேண்டும், அது ஏன் வந்தது, யாருக்காக வந்தது, இப்படி பல வகையாக ஆராய வேண்டும்.

சக்தியை வழிபடுவது இங்கு தடை அல்ல, ஆனால் அது சரியான வழிபாடா என்பதுவும் அதற்க்கான காரணமும் மிக அவசியம் அல்லவா..!

அழகுத் திருமேனியாக அம்மை பல வடிவங்களில் காட்சி தருகிறாள் அப்படி இருக்க ஏன் இந்த கோணங்கள் நிறைந்த குழப்பம் உங்களுக்கு.., வேண்டுமானால் அம்மையின் திரு உருவத்தை விக்கிரகமாக செய்து அவளை வழிபடுங்கள். இப்படித் தான் இருக்கிறாள் என்ற தெளிவான காட்சிகள் இல்லாத ஒன்றாக இருந்தால் அதை செய்யலாம்.

பொன்னம்பால்த்தானை மட்டுமே இங்கு காட்ட முடியாத நிலை இருப்பதால் அவனுக்கு ஏற்பட்ட மறை பொருள் வழிபாடுகளின் பிரதிபலிப்பே இவை.. இந்த மகா மேரு எனும் மாயப்பொருள்.

சித்தர்கள் நாற்பது முக்கோண பூஜாவிதி என்று கூறியது இது தான் என்று கூறிக்கொண்டு இருக்கும் கூட்டமும் உண்டு.., ஆனால் அது மறை வழிபாடாகிய சிவசக்தியை கூறுவது என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை..,

ஆதி சங்கரனார் ஆதியானவர் கிடையாது என்பதை மனதில் வையுங்கள்.., அவர் காவி உடுக்க நெசவு செய்யும் இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டபின்னர் வந்தவர் அவர் என்பது தெளிவான அறிவு.., ஆகவே நமது நாகரீகம் வளர்ந்த பின்னர் தான் ஆடை வந்திருக்கிறது.., அப்படி இருக்க ஆதி என்ற சொல் இங்கு இவருக்கு அல்ல இவரின் பாட்டனாருக்கு கூட கூற முடியாத சொல்.,

பூமியை சரி செய்ய அகத்தியரை தென் நாடு அனுப்பியதாக கூறப்படுவதே இங்கு ஆதியான விடயம் அல்ல, ஆகவே ஆதியில் கூறியது என்ற ஒன்று இன்று எவனுக்கும் தெரியாத விடயம்..,

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி” என்று கூறியதே இப்படி பல மாயைகள் சூழ்திருப்பதை காட்டியே..,

சித்தர்கள் காலத்துக்கு முன்னரே நாகரீகம் வளர்ந்து விட்டது, அவர்களே பதினெண் பேர் யார் என்று தெரியாத நிலையில் இருக்கும் போது நாம் ஆதியானவன் என்று இங்கு பரமனை விட்டு யாரையும் கூற முடியாது…,

மேரு வழிபாடு கூடாது என்பது எமது பதிவு அல்ல, அதை ஏன் செய்கிறோம் யாருக்கு செய்கிறோம் என்ற தெளிவுடன் செய்யுங்கள்..

வாதங்கள் என்ற பேரில் தேவையற்ற விடயங்களை கொண்டுவந்து பேச முன் சிந்தித்து விட்டு பதிவிடுங்கள்.. பின்னர் நாம் சாட்சிகள் காட்டி முட்டாள்களே என்றால் எம்மை கோபிக்க கூடாது..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்