கிரக மாற்றம்.. ஏன் இந்த பயம்..!

வணக்கம் தோழர்களே,

இன்று சனி மாற்றம் என்ற பேரில் பல ஆலயங்களிலும் பூசைகள் ஓமங்கள் என வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

சனி மாறுகிறது, அது அதன் வேலை அதற்காக நமது வேலைகளை விட்டு அதற்கு என்ன செய்யப் போகிறோம், அப்படி எதையாவது செய்தால் அது நம்மை கண்டுகொள்ளாதா… அப்படியானால் அதுவும் லஞ்சம் வாங்கிய அதிகாரி போல் செயலாற்றுகிறதா..!

lord-ganesha-wallpaper-004
என்னடா ஒரே குழப்பமாக இருக்கு உங்கள் விளக்கம் எல்லாம்…! தனது கடமையை செய்வது தெய்வங்களின் பனி என்றால் அது எப்படி இங்கு மாற்றம் பெற முடிகிறது.. !

கிரக மாற்றம் நடப்பதால் கிரகங்கள் ஒன்றும் தங்களுக்குள் அடிபடுவதாக தெரியவில்லை, ஆனால் நாம் அடிபடுவதுதான் ஏன் என்றும் புரியவில்லை.

பாவ புண்ணியம் என்கிறீர்கள், புண்ணியம் செய்தவனும் ஏன் சனி மாற்றம் என்றால் அஞ்சுகிறான் என்பது ஆச்சரியமே..!

ஆலயங்களில் தினமும் தங்கள் பனிகளை இறைவனுக்கு ஏன் கிரகங்களுக்கு செய்யும் குருக்கள், ஐயர்கள் கூட சனி மாற்றம் என்றால் ஏன் அஞ்சுகிறார்கள், நீங்கள் தான் தினமும் இறைவனுக்கு தொண்டு செய்கிறீர்களே..! பின் ஏன் இந்த பயம்…, அப்படியானால் உங்கள் தொண்டு உண்மையானது அல்ல என்பதும் நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள் இறைவனின் பெயரால் என்பதுவும் மிக தெளிவாக சாட்சியாகிறது..

இதை மக்கள் புரிவதாக இல்லை..! ஆலயத்தில் பூசை செய்யும் ஐயர் என்ன பாவம் செய்தார் கிரக மாற்றத்தை நினைத்து அஞ்சுகிறார்… இவருக்கே இப்படி என்றால் நாம் என்ன செய்தாலும் இதன் பாதிப்பு நம்மை விடப்போவதில்லை என்று… கையில் இருக்கும் பணத்தை ஐயருக்கு கொடுப்பதை விடுத்து ஏழைகளுக்கு உதவினால் சிறப்பாக இருக்கும்..

அல்லது தவறு செய்த ஐயர் போல் நீங்களும் அஞ்சி பொய்யான பூசைகள் பரிகாரங்கள் செய்து பணத்தை கொடுத்து பாவத்தை அதிகப்படுத்தலாம்… இரண்டும் உங்கள் பார்வையை பொருத்தது..

பரிகாரம் செய்தால் கிரக பார்வை குறையும் என்கிறார்கள்… பரிகாரம் என்றால் என்ன,…! பாலிள் நீர் கலந்து வியாபாரம் செய்யும் ஒருவனுக்கு எது பரிகாரமாக இருக்கும்..! கல்லச் சாரயம் விற்கும் கடைக்காரனுக்கு என்ன பரிகாரம்… இவர்கள் இருவருக்கும் ஒரே பரிகாரம் என்றால் அது எப்படி சரியாக இருக்கும்..

இன்று லஞ்சம் என்ற விடயம் வருவதற்கு காரணமே இந்த சமய சடங்குகள் தான்.. இறைவனே வாங்கிக் கொண்டு விடுகிறான் என்பதை பார்த்த மனிதன் நாம் செய்தான் என்ன என்ற சிந்தனையின் வெளிப்பாடுதானே லஞ்சமாக இருக்கிறது..

நீங்கள் செய்யும் தவறுகள் பின்னர் நீங்கள் செய்யும் பரிகாரங்கள் மூலம் தீர்க்க்ப்படுவதானால் இறைவனின் ஐந்தொழில்கள் என்ன செய்கின்றன..!

இப்போது சபரிமலை காலம் போல்.. கருப்பு வேட்டியும் சட்டையும் கண்களை மூடும் அளவு வீதிகளில் ஆண் பெண் கூட்டம் திரிகிறது..

ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆட்டம்… வருடம் முழுவதும் அவர்கள் செய்யும் வினைகளுக்கு அளவு இல்லை, ஆனால் இந்த காலத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் மிக அருமை.. இதைத் தான் நாடகம், நடிப்பு என்பது..

கால்களில் பாதனிகள் கூட போடுவதில்லை.. பாதனிகள் போடுவதற்கும் ஒழுக்கத்துக்கும் என்ன இருக்கிறது என்று இதுவரை எமக்கு புரியவே இல்லை..!

குடிச்ச குவாட்டர்களுக்கு அளவு கிடையாது ஆனால் கடைகளில் தண்ணீர் கூட குடிப்பதற்கு சாமியார்கள் இடங்கொடுப்பதில்லை.. என்னடா இது கூத்து..

எந்த அளவு சமய சடங்குகள் மனிதர்களை அடிமைப்படுத்தி இருக்கிறது..

கட்டுப்பாடுகள் என்பது உங்கள் சிந்தனையில் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகள் சிந்தனையோடு கூடிய ஆய்வுகள் மூலம் இருக்க வேண்டும்.

வீரனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பது போல் நாம் சரியானவர்களாக இருந்தால் கிரக மாற்றம் என்ன எந்த மாற்றம் நடந்தாலும் நாம் திடமாக இருக்க முடியும்..

இறைவனை கைகூப்பி வணங்கும் போது நமது சிந்தனையில் இருக்க வேண்டியது “ நாம் தவறு செய்யவில்லை” என்பது.. அதற்கு நீங்கள் சரியானவராக இருந்தால் அதுவே இறைவன் உங்களிடம் எதிர்பார்பதாக இருக்கும்..

” உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” இங்கு ஆலயத்தில் இருக்கும் ஐயர்களிடம் கூட கமலத்தை கானவில்லை, மாறாக கமலம் பூக்கும் சேருதான் தேங்கி கிடக்கிறது..

ஆலயத்தில் இருக்கும் பிரசாதத்தில் கூட கலப்படம் செய்யும் சமயமாக நாம் இன்று இருக்கிறோம் என்றால் வெட்கப்படவேண்டியது யார்..!

துனிச்சலாக சனி மாற்றத்தை எதிர் கொள்ளுங்கள்.. சனியிடம் நேரில் பேசுங்கள் உங்களுக்கு இடை தரகர்கள் தேவையில்லை…

“ நான் சரியாகவே நடக்கிறேன்.. இதை தாண்டியும் நீ என்னை தண்டிப்பதானால் நான் அதை நம்பிக்கையோடும் துனிச்சலோடும் ஏற்கின்றேன், என்னை படத்தவன் இதற்கு சாட்சி சொல்லுவான்” என்று பேசுங்கள்.. உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு வழி காட்டும்..

நாம் இந்த ஆரூடங்களை ஆதரிப்பவர் இல்லை, ஆனால் உங்கள் மனக்குழப்பங்கள் தீர இந்த சிறு விளக்கம்..

” இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்