செங்கடுக்காய் இலேகியம் மகா கற்பம்

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

திரு ஜெயகுமார் செய்த இரண்டாவது செங்கடுக்காய் கற்பம், இதை அவரிடம் கூறிய போது அவரால் நினைத்துப் பார்க முடியாத ஆச்சரியம், இவ்வளவு இலகுவானதா இது என்று ! பின்னர் இதன் அடியும் முடியும் தெளிவு படுத்தியபின்னர் உடனடியாக இதை செய்துவிட்டார்.

வயது எல்லைகள் கடந்து எவரும் சாப்பிடக்கூடிய ஓர் மகா கற்பம் இது. இலகுவாக இதை விவரிப்பதானால்,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்” என்று அவ்வை வினாயகருக்கு கொடுத்த கற்பம், அவ்வையின் கற்பம், வினாயகருக்கு இதை கொடுத்தே அவ்வை சங்கத்தமிழை பெற்றால் என்றால் சொல்லவா வேண்டும்.

223

ஆனால் இன்று இது இந்த பாடல் வினாயகர் துதியாகிவிட்டது, கற்பம் செய்யும் விளக்கம் கொண்ட பாடல் ஆனால் பக்திப் பாடல் என்ற வரிசையில் வந்துவிட்டது.

இதை நாம் முன்னர் வேறொருவரிடம் விளக்கம் கொடுத்தோம் ஆனால் அவர்களால் இதை குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்க முடியவில்லை. என்ன செய்வது “ மாயப் பிறப்பு” என்பது இது தானே.

” ஐம்புலக்கதவை அடக்கும் உபாயம்” இதை சாப்பிட்டால் அது நடக்கும்.

முறையான கல்வி என்பது சித்தர் பாடல்களை படிப்பதால் மட்டும் வருவதில்லை, அதனால் தான் விளக்க உரை எழுதி எவனும் சித்த மருத்துவனும் இல்லை, இரசவாதியும் இல்லை.

32

விட்ட குறை இருந்தால் கிடைக்கும்… என்றார்கள் சான்றோர்கள்.. முயற்சி செய்து பார்த்தால் தான் தெரியும் குறை உண்டா இல்லையா என்று.

இந்த கற்பம் குழந்தைகளை ஞானமார்கம் அடையச்செய்யும், அதாவது தெளிவான சிந்தனையை கொடுக்கும், குறிப்பாக பெண்களை காக்கும் ஓர் மகா அவுடதம்.

” பேடு நீக்கி பிறத்தல் அறிது” என்ற அவ்வையின் கற்பம் என்றால் அது யாருக்கு மிக உகந்ததாக இருக்கும் என்று பாருங்கள்.

மிக அற்புதமாக வந்திருக்கிறது ஜெயகுமார், வாழ்த்துக்கள், இதன் அடுத்த கட்டமாக இதில் இருந்து வழலை வடிக்கும் முறையை படிக்கலாம். அது சுத்த கங்கையாக இருக்கும்.

பலரும் நிலைப்பது குறித்த பொருள் ஒன்றாகத் தானே இருக்க முடியும் என்று, ஆனால் அப்படி அல்ல இங்கு இலகுவாக கிடைக்கும் விடயங்கள் மிக சக்தியானது, ஆனால் அதை யாரும் கருதுவதில்லை. அதாவது “ ஏகன் அனேகன்” என்றால் அவன் ஒருவன் ஆனால் பலவாக பிரிந்திருக்கிறான் அவன் எந்த சக்தியாக இருக்கிறான் என்றால் அதுவும் பலவாகவே இருக்கிறது, ஆகவே சரியான ஆய்வுகள் இருந்தாள் அவன் சித்தன் அல்ல சிவனாகவே கருதப்படுவான்.

அதனால் தான் சித்தர்கள் தாமே சதாதிவம் என்றார்கள்.. இப்படி இது தொடர்பாக இன்னும் பல பல கூறவேண்டும்.

குருகுலம் ஆரம்பமாகட்டும் பல விடயங்கள் மாணவர்களுக்கு கற்பிக்க இருக்கிறேன், எம்மால் முடிந்த அளவு சித்தர் வாகடம் சித்தர் இலக்கியம் உங்களுக்கு தருகிறேன், ஆனால் உண்மையை ஆய்வு செய்து அதன் வெற்றியை அடைவது உங்கள் சாமர்த்தியம்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்