அண்டக்கல்

வணக்கம் தோழர்களே, மற்றும் மாணவர்களே,

இதோ எமது இரசவாத மாணவர் திரு ஜெயகுமார் பிள்ளை அவர்களின் அடுத்த நகர்வு, மிக சிறப்பான ஓர் அண்டக்கல் கண்டெடுத்திருக்கிறார். ஓர் சிறப்பான மாணவருக்கு உரிய செயற்திட்டம் இது தான், மந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மாங்கனி கிடைக்காது என்ற உண்மையை நன்கே புரிந்திருக்கிறார் இவர். கடந்த 25 ஆண்டுகள் மந்திரிக தேர்ச்சி பெற்றவர், ஆனால் உடலை காக்க மாந்திரீகம் போதாது என்பதை உணர்ந்து தற்போது கற்ப மருந்துகள், இரசவாத உணமைகளை ஆய்வு செய்கிறார்.

22

குரு சொன்னால் அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மிக தெளிவான சிந்தனை கொண்ட மாணவர் இவர். தொடர்சியாக பல மருந்துகளை சிறப்பாக செய்கிறார், விரைவில் ஓர் சிறந்த கற்ப மருந்துகளை செய்யும் ஆற்றல் இவருக்கு வந்திவிடும் என்பதில் ஐயமில்லை.

எமது குரு வம்சத்தினரின் ஆசிகள் இவருக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் என்று தென்னாடு உடையவனை வேண்டுகிறேன்.

நாம் ஓர் மக்கு மருத்துவர் என்பதற்கு இவர் ஓர் சிறந்த எடுத்துக் காட்டு, மக்கு மருத்துவரிடம் கற்று தேரும் ஓர் வருங்கால மக்கு இரசவாதியும், கற்ப மருந்தாக்கள் மருத்துவரும் திரு ஜெயகுமார் பிள்ளை அவர்கள்.

உங்கள் பாரட்டுக்களையும் இவருக்கு தெரிவியுங்கள்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்.