அண்ணாசி பழம் சாப்பிடலாமா..

வணக்கம் தோழர்களே,

கடந்த சில நாட்கள் முன் நாம் அனுராதபுரம் எனும் இலங்கையின் பாரம்பரிய தலைநகரத்துக்கு சென்ற போது அங்கு ஓர் வீதிக்கடையில் அழகுக்காக அவ் அண்ணாசி வளர்க்கப்பட்டிருந்தது. கடைக்காரரிடம் பேரம் பேசி அதை சட்டியோடு எடுத்து வந்துவிட்டேன்.

pineapple

இது பலரும் பார்த்திருக்கலாம் தெரிந்திருக்கலாம், ஆனால் இதன் மருத்துவக்குணம் மிக அற்புதமானது பல வருடங்கள் நாம் இதை தேடியும் கிடைக்கவில்லை என்ற கவலை தற்போது தீர்ந்தது.

இதன் சுவையும் மிக தித்திப்பாக இருக்கும், இதன் பழ ரசம் கற்பமருந்துகளுக்கு அமுரி போன்று செயலாற்றும். இதன் ரசத்தை சரியாக பிரித்து அதில் இருந்து எண்ணெய் தயாரித்தால் மிக அற்புதமான வாசனைத் திரவியம் செய்ய இது உதவியாக இருக்கும். விலை உயர்ந்த வாசனைத் திரவியங்கள் மற்றும் உயர்தர உணவுகளில் இதன் எண்ணெய் வாசனைக்காக சேர்க்கப்படும்.

இப்படி பல அதிசயமான மூலிகைகள் பல இந்த பூமியில் இருக்கத் தான் செய்கிறது.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்