பதிவு செய்த வாசகர் படிக்கவும்..

வணக்கம் தோழர்களே/மாணவர்களே,

இது எமது தனித்துவமான வலைத் தளம். இங்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் சித்தர்கள் பற்றிய சந்தேகங்கள், மருத்துவம் சார்ந்த விடயங்கள், மாந்திரீகம் போன்ற குழப்பங்கள் பற்றி எம்மிடம் நீங்கள் கேட்கவும், உங்கள் கருத்துக்களை குறிப்புக்களை பதியவும் உங்களுக்கு அணுமதி தரப்பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இங்கு பதிவு செய்து தங்கள் வலைத்தளத்தை பாருங்கள், தங்கள் குருகுலத்துக்கு வாருங்கள் என்று எழுதுகிறீர்கள். ஏன் இந்த வேண்டாத வேலைகள். உங்கள் தளத்தில் உங்கள் திறமைகளை எழுதுங்கள், சக்திகளை காட்டுங்கள் மற்றவரின் தளத்தில் உங்கள் விளம்பரம் செய்யாதீர்கள். அதுவும் குறிப்பாக எமது தளத்தில் அது வேண்டாம்.

அப்படியே சில மருத்துவக்குறிப்பும் எழுதுகிறீர்கள், அப்படி எழுதும் போது அந்த குறிப்பு எந்த மருத்துவ நூலில் கிடைக்கிறது என்ற விளக்கமும் தரவேண்டும். மற்ற தளங்களில் இருக்கும் பதிவுகளை இங்கு செருகாதீர்கள்.

நீங்கள் செய்து பார்த்த ஆய்வுகள் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் செய்யுங்கள் அவை உண்மையானவையாக இருப்பின் அவற்றை பதிவிக்க அனுமதி தரப்படும்.

இந்த இணையத்துக்கு வந்து இதை படியுங்கள், அந்த இணையத்துக்கு வாருங்கள் என்ற விளம்பரம் இங்கு வேண்டாம்.

அப்படி செய்யும் வாசகர்கள் தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள்.

நன்றி