முருகனும் மயிலும்

முருகன்_அறுபடைவீடு

வணக்கம் தோழர்களே,

இன்று சட்டி நாள் என்று பலருக்கும் தெரியும். முருகனை பற்றி இன்றுதான் பேச முடியும்.

ஒரு சிறு சந்தேகம் எமக்கு யாராவது தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்.

முருகனுக்கு மயில் வாகனமாக இருப்பது தெரியும், மயில் எப்படி வாகனமானது என்று தான் கேள்வி. அதாவது சூர சங்ஙாரத்தின் போது சாகாவரம் பெற்ற சூரணை அழிக்க இயலாத காரணத்தால் வேல் கொண்டு மாமரமாக நின்ற சூரணை இரு கூறாக்கி அதை மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார் சண்முகன் என்பது புராணம்.

இப்படி மாற்றிய சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் பெற்றார் என்கிறது புராணம். அதே புராணம் மாங்கனி கிடைக்க மயில் வாகனம் ஏறி உலகை சுற்றினார் என்கிறது…

மாம்பழம் கதை அவரின் சிறுவயதில் நடந்த நிகழ்சி, சூர வதை வாலிபத்தில் நடந்த நிகழ்சி. எப்போது அவருக்கு வாகனம் மயில் கிடைத்தது என்று நாமும் கடுமையாக அலசிப் பார்கிறோம் ஓர் இடத்திலும் சரியான சாட்சிகள் இல்லை.

நாம் செங்குந்த முதலியார், முருகனின் தம்பிமார்கள் என்று புராணம் கூறும் வம்சத்தில் (நவ வீரர்கள்) வந்திருக்கிறோம், ஆனால் சந்தேகம் என்பது அறிவு தொடர்புடையது அது தெளிவில்லாமல் இருக்க முடியாதே..

இங்கு யாருக்காவது முருகனுக்கும் மயிலுக்கும் இருக்கும் ஒற்றுமை தெரிந்தால் கூறுங்கள்.

” சட்டியை நோக்க சர அண பவ னார் சீடருக்கு உதவும் செங்கதிர் வேல் ஓன்.”

புராணங்கள் திரிபுபட்ட காரணங்கள் உண்டு.

இந்து மதம் ஆறு சமய கலாச்சாரமாக மாற்றப்பட்டது, அதை முருகனுக்கு என்று தனி தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவனின் ஆறு மந்திரங்களின் சொரூப நிலை சர அண பவ என்பது சூட்சுமம், ஆனால் அவனுக்கு ஏன் தனி இயல்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. முருகன் என்பது அருவ நிலையில் இருக்கும் சிவத்தின் உருவ நிலை.

ஈசானம்
தற்புருடம்
வாமதேவம்
அகோரம்
சத்யோ தோசம்
இருதயாயம்

எனும் ஆறு மந்திர உருவமே முருகன், ஆகவே சிவனையும் முருகனையும் வேறாக பார்க்க முடியாது. சிவனே அவன் என்பதால் அவனுக்கும் இரண்டு கால்கட்டுக்கள். இப்படி புராணம் பல சிக்கல்களை தன்னுல் வைத்திருக்கிறது.

முருக பக்தர்களை நாம் தவராக கூறவில்லை, நாம் எந்த அளவு அவரின் சீடன் என்பது எம்மை அறிந்த பலருக்கும் தெரியும். ஆனால் உங்கள் மனதின் கண் உண்மை எது என தெரிந்து அவரை அழைத்தால் “வேல் உண்டு வினைதீர்க்க, மயிலுண்டு எமைக்காக்க” பாரினில் பயம் எதற்கு..

சரவணபவ என்று கூறும் ஆறு எழுத்துக்கள் தவரானவை. அவை சர அண பவ என்றே குறிக்கப்பட வேண்டும். அதற்கு காரணம் உண்டு. மந்திர விதிகளில் இயந்திரம் தாபிக்கும் போது அவற்றுக்கான சில முறைகள் உண்டு, அவற்றின் அடிப்படையில் ஒரே எழுத்து இரண்டு இடங்களில் வரும் போது அவை எதை குறிக்கும் என்ற குழப்பம் ஏற்படும்.

சரவணபவ என்றால் இரண்டு “ வ” இருக்கிறது, அறுகோணத்தில் எழுதும் போது எது எதைக் குறிக்கும் ”வ” என்று கூறமுடியாது போகும். ஒவ்வோர் அட்சரமும் அதன் இடம் நேரம் என்பவற்றை பொருத்தே பலன் தரும். ஆகவே பரிபாசை சரவணபவ யிலும் உண்டு.

ஆறு எழுத்துக்கள், ஆனால் அத்தனையும் குறில் எழுத்து. அவை மூன்று சோடிகளாக பிரிந்து கானப்படும்.

சர அண பவ  இதில் சிவமும் சக்தியும் சேர்ந்து நிற்கும். அதனால் தான் பார்வதி தன்னை வேலாக மாற்றி அவரிடம் கொடுத்தால் என்றார்கள் சான்றோர்கள். சிவமும் சக்த்தியும் தனியாக இருப்பதில்லை, இருக்கமுடியாது. அதனால் தான் அறுகோணம் என்ற இரண்டு முக்கோணங்களை படைத்தனர். அதன் நடுவில் விந்துவாகிய வட்டத்தை காட்டி படைப்பை வைத்தனர் சான்றோர்கள்..

ஒடுக்கமும் விரிவும் வட்டமாகவே இருக்கும் அதற்கு கோணங்கள் இருக்க முடியாது, பிறப்பும் இறப்பும் போல.

ஆகவே முருகனின் மயில் வாகனம் சான்றோரின் ஓர் பரிபாசை குறியீடு ஞானத்தை தருபவன் என்றால் அவனை முட்டாள் தனமாக வழிபட்டால் எப்படி அவன் ஞானத்தை தருவான்.

மாயயை அழிக்க வந்தவன் (சூரண் மாயயையின் மகன்) உங்கள் அறிவு அரோகரா என்று கூப்பிடுவதில் இருந்து என்ன பலன். அவன் தோற்றத்தின் தெளிவு இருந்தால் அவனின் அருளும் கிடைக்கும்.

முருகன் என்றால் அழகன், அழகு என்றால் ஆபத்து என்று உட்பொருள் இருப்பது தெரியாதா என்ன..!

ஆய்வுகள் இல்லாவிட்டால் அவன் ஞானியாக இருக்க முடியாது, கடவுள் என்பது வேறு கடவுள் நம்பிக்கை என்பது வேறு..

நம்பிக்கை அதிகமானால் மதம் தான் பிடிக்கும், ஞானம் பிறவாது.

ஆறு எழுத்து என்பதால் ஆறு இடத்தில் அவரை வைத்திருக்கும் நாம், மற்ற மலைகளில் அவர் இல்லையா என்ன..! அப்படி குறித்த ஆறு வீடுகளில் என்ன மகிமை என்று சிந்திக்க வேண்டும்.

சிந்தியுங்கள்.. முடிந்தாள் எமது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்..

” ஓன் சௌம் சர அண பவ தேவாயா நம “

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்